வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவர்க்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர். அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு. சித்திரை பௌர்ணமி, மார்கழித் திருவாதிரை நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மணிவாசகர் திருவடி தோய்ந்த இடத்தைத் தொட்டுக் கும்பிட்டு மனநிறைவோடு திரும்புகிறோம். திருவாசகம் கீர்த்தித் திருவகவல் (1) “உத்தரகோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும்” (48-50) (2) “பாண்டிய நாடே பழம் பதியாகவும் பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன் உத்தரகோச மங்கை யூராகவும்” (118-120) (3) நீத்தல் விண்ணப்பம் : “கடயவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட விடையவனே விட்டிடுதிகண்டாய் விறல் வேங்கையின்தோல் உடையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்குஅரசே சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே” (4) திருப்பொன்னூசல் “மாதாடு பாகத்தன் உத்தரகோச மங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதோடு குண்டலங்கள் பாடிக்கசிந்து அன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ” |