பாடல் பெற்றதாகும். இக்கோயிற் பதிகத்தில் அழகர் என்ற சொல்லால் இறைவனைக் குறிப்பது இதற்குரிய சான்றாகிறது.) கூற்றுவ நாயனார் அவதரித்த பதி. “கூற்றுவன் - களப்பாளன், களப்பால் என்னும் சிவதல (திருவிசைப்பா) நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிறந்த சிவபக்தியும் வீரமும் உடையவர். மூவேந்தர்களை வென்று சபாநாயகப் பெருமான் திருவடியை முடியாகச் சூடிக் கொண்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பெயர் களந்தையாண்டான், களந்தையாளி, களந்தையுடையான், களப்பாளி என்று வழங்குகிறது. “ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன், அடியேன்” - திருத்தொண்டத் தொகை. இவருடைய மரபுளோர்க்கு களப்பாளன், களக்குடையான், களாக்கான் முதலிய பெயர்கள் வழங்குகின்றன. நாடுகளைப் பல கூற்றங்களாகப் பிரித்த காரணத்தால் கூற்றுவன் என்ற சிறப்புப் பெயர் வந்தது.” - ஆதாரம் : சூரியகுலக் கள்ளர் சரித்திரம் திருக்களர் சுவாமிநாத உபாத்தியாயர் எழுதியது - 1926ல் வெளியீடு. (1) திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிச் சாலையில் 3 கி.மீ. சென்று மடப்புரம் தாண்டினால் இடப்பால் களப்பால் என்று கைகாட்டி உள்ளது. அச்சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். ஒரு வழிச்சாலை. (அல்லது) (2) இதே திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிச் சாலையில் மேலும் சென்று ‘திருப்பத்தூர் பாலம்’ என்னுமிடத்தையடைந்து இடப்பால் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று மீனம நல்லூர், காடுவாக்குடி, திருக்களர் முதலிய ஊர்களைத் தாண்டி கோயில் களப்பாலை அடையலாம். (திருக்களர் - திருமுறைத்தலம்) இச்சாலையும் ஒருவழிச்சாலைதான். தார்ச்சாலையாக இருந்தாலும் இடையிடையே மண்சாலையும் கலக்கிறது. விழிப்புடன், விசாரித்துச் செல்ல வேண்டும். இறைவன் - ஆதித்தேச்சரர், அழகிய நாதசுவாமி இறைவி - பிரபா நாயகி, பண்ணேர் மொழியாள் சிறிய கோயில். பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நின்றால் நேரே மூலவர் தரிசனம். வலப்பால் அம்பாள் தரிசனம். கோயிலுள் கூற்றுவ நாயனாரின் மூலவுருவம் உள்ளது. |