பக்கம் எண் :

894 திருமுறைத்தலங்கள்


     அம்பாள் நின்ற திருக்கோலம். வெள்ளிக்கவச அலங்காரம் மனத்திற்கு
மட்டிலா மகிழ்வைத் தருகிறது.

     மூலவர் ஆதித்தேச்சரை வெள்ளி நாகாபரண கவசத்தில் தரிசிக்கும்
போது மெய்ம்மறந்து போகிறோம். பின்னால் அழகான பிரபை.

     இங்குள்ள நடராசர் மூர்த்தம் திருவாரூரில் பாதுகாப்புக்காக
வைக்கப்பட்டுள்ளதாம். சிவசாரியார் வீடு கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.

     இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், கோட்டூர் (திருமுறைத் தலங்கள்),
கீழ்க்கோட்டூர் மணியம்பலம் (திருவிசைப்பாதலம்) முதலிய தலங்கள் உள்ளன.

     “நீலமே கண்டம் பவளமே திருவாய்
          நித்திலம் நிரைத் திலங்கினவே
     போலுமே முறுவல் நிறைய ஆனந்தம்
          பொழியுமே திருமுகம் ஒருவர்
     கோலமே அச்சோ அழகிதே என்று
          குழைவரே கண்டவர் உண்ட(து)
     ஆலமே ஆகில் அவரிடங் களந்தை
          அணிதிகழ் ஆதித் தேச்சரமே.”

     “குமுதமே திருவாய் குவளையே களமும்
          குழையதே இருசெவி ஒருபால்
     விமலமே கலையும் உடையரே சடைமேல்
          மிளிருமே பொறிவரி நாகம்
     கமலமே வதனம் கமலமே நயனம்
          கனகமே திருவடி நிலைநீர்
     அமலமே ஆகில் அவரிடங் களந்தை
          அணிதிகழ் ஆதித்தேச்சரமே.”


அஞ்சல் முகவரி :-

     அ/மி. அழகிய நாதசுவாமி திருக்கோயில்
     கோயில் களப்பால்
     நடுவக் களப்பால் அஞ்சல் - 614 710.
     (வழி) திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி வட்டம்
     திருவாரூர் மாவட்டம்.