பாடல் ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என்னுயிர்க்கு அமுதினை எதிரில் போக நாயகனைப் புயல்வனற்கு அருளிப் பொன்னெடுஞ்சிவிகை யாவூர்ந்த மேக நாயகனை மிகு திரு வீழி மிழலை விண்ணிழி செழுங்கோயில் யோக நாயகனையன்றி மற்றொன்றும் உண்டென உயர்கிலேன் யானே. பாடு அலங்காரப் பரிசில் காசு அருளிப் பழுத்த செந்தமிழ் மலர்சூடி நீடு அலங்காரத்து எம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை வேடலங்காரக் கோலத்தின் அமுதைத் திருவீழிமிழலை யூராளும் கேடிலங் கீர்த்திக் கனக கற்பகத்தைக் கெழுமுதற்கு எவ்விடத்தேனே.” (சேந்தனார்)
(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.) பாடல் “பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகு காவிரிக்கரை மேய ஐயா ! திருவாவடுதுறை அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால் மையார்தடங்கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே.” (சேந்தனார்) தலம் - 58 |