பக்கம் எண் :

912 திருமுறைத்தலங்கள்


     தந்திரி வீணை கீதமும் பாடச்          
         சாதி கின்னரங் கலந்தொலிப்ப     
     மந்திரகீதந் தீங்குழல் எங்கும்          
        மருவிடம் திருவிடைமருதே.”
     கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக்
          கலந்தமண் ணிடைக் கிடந்தாங்கு
     நலம் கலந்து அடியேன் சிந்தையுட் புகுந்த
          நம்பனே ! வம்பனே னுடைய
     புலங்கலந்தவனே ! என்று நின்றுருகிப்
          புலம்புவார் அவம்புகார், அருவி
     மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையாள்
          மருவிடம் திருவிடை மருதே.”
                                (கருவூர்த்தேவர்)

11. திருவாரூர்

     (தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது)

                    
பாடல்

     “பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
          பருகு தோறு(ம்) அமுதம் ஒத்தவர்க்கே
     தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
          திருவுரு இருந்தவா பாரீர் ;
     சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
          தனிமுழுமுதலுமாய் அதற்கோர்
     வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
          விடங்கராய் நடம்குலாவினரே.” (பூந்துருத்தி காடநம்பி)

12. திருவீழிமிழலை

     (தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.)