பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 911


மேன்மைக்கும் செயற்பட்டு வருகின்றது. இத்தலத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களின்
அருளாட்சிக்குட்பட்ட ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் கோயில் உள்ளது.

     அற்புதமான அம்பாள் தரிசனம் - அவசியம் தரிசிக்க வேண்டும்.

                    
திருவிசைப்பா

     “பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர்
          தாம் பலர் ஏம்பலித்து இருக்க
     என் நெடுங்கோயில் நெஞ்சுவீற்றிருந்த
          எளிமையை என்றும் நான் மறக்கேன்
     மின்னெடும் புருவத்து இளமயில் அனையார்
          விலங்கல் செய் நாடகசாலை
     இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
          இராசராசேச்சரத்தி வர்க்கே.”

     “சரள மந்தார சண்பக வகுள
          சந்தன நந்தன வனத்தின்
     இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
          இராசராசேச்சரத்தி வரை
     அருமருந் தருத்தி அல்லல்தீர் கருவூர்
          அறைந்த சொல்மாலை ஈரைந்தின்
     பொருள் மருந்துடையோர் சிவ பதம் என்னும்
          பொன் நெடுங்குன்றுடை யோரே”
                               (கருவூர்த்தேவர்)

10. திருவிடைமருதூர்

     (தலவிளக்கம் திருமுறைத் தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.)

                  
பாடல்

     “இந்திர லோக முழுவதும் பணிகேட்டு
          இணையடி தொழுதெழத் தாம்போய்
     ஐந்தலை நாகம் மேகலை அரையா
          அகந்தொறும் பலிதிரி அடிகள்