பக்கம் எண் :

910 திருமுறைத்தலங்கள்


     (பாண்டி குலாசனி என்பது இராசராசனின் விருதுப்பெயர். இதற்குப்
பாண்டியர் குலத்துக்கு இடியைப் போன்றவன் என்று பொருள்.)

     பிரகதீஸ்வரமகாத்மியம், சமீவன க்ஷேத்ரமான்மியம் முதலிய தலபுராண
நூல்கள் (சமஸ்கிருதத்தில்) உள்ளன. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
‘பெருவுடையார் உலா’ பாடியுள்ளார்.

     இவ்வளவுச் சிறப்புக்களோடு திகழ்ந்த தஞ்சைப் பெரிய கோயில்
காலச்சூழலால் மாறி, செல்வம் அனைத்தையும் இழந்து, இன்று கலையழகு
ஒன்றை மட்டுமே கொண்டு காட்சிப் பொருளாக இருந்து வருகின்றது.

     இதன் சிறப்பைக்கருதி அரசுச்சார்பில் ஆண்டு தோறும் இராசராசனின்
சதயத் திருவிழா நடத்தப்படுகிறது. அம்மன்னனின் உருவச் சிலையும்
வைக்கப்பட்டுள்ளது. இராசராசனுடைய ஆயிரமாண்டு விழா அப்போதைய
பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களுடைய வருகையுடன் அரசினரால்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

     இக்கோயிலின் பெருமையை உணர்ந்து ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்கள் இவ்விழாவின்போது
இராசராசசோழனது உருவச்சிலைக்கு 300 கிராமில் தங்கக்கிரீடம் செய்து 16-9-
1984 அன்று அப்போதைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் மூலம்
அணிவித்துச் சிறப்பு செய்தார்கள். மேலும் பெரும் பொருள்களைப்
பொன்னிலும் வெள்ளியிலும் செய்தளித்துக் கோயிலில் பூஜைகள் சிறப்பாக
நடைபெற நிபந்தங்கள் வைத்த அம்மன்னனின் மனநிலை, காலப்போக்கால்
மாறுபட்டுப்போக இன்று கோயிலில் பூஜைகள், நடைபெறுவதற்குத் தேவைப்படும் வெள்ளி (பூஜை)ப் பாத்திரங்களை வழங்கியும், பூஜைகள் தடையின்றி நடைபெற நிரந்தர நிதிவைப்புக்கும் - டிரஸ்டுக்கும் ஏற்பாடு செய்தும் ; அதற்கு முதல் தொகையாகத் தாமே முன் வந்து ஒரு லட்சம்
ரூபாய் வழங்கியும் உள்ளார்கள்.

     தவிர இராசராச சோழன் தன் காலத்தில் பொறித்து வைத்துள்ள 80க்கும்
மேற்பட்ட கல்வெட்டுக்கள் அனைத்தையும் அச்சிட்டு ‘சிவபாதசேகரன்
கல்வெட்டுக்கள்’ என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்கள்.

     ஓலைச்சுவடிகளையும் அரும்பெரும் நூல்களையும் காத்து வரும்
சரஸ்வதி மகால் நூல் நிலையம் தஞ்சையில் உள்ளது. தமிழ்ப் பல்கலைக்
கழகம் இந்நகரில்தான் நிறுவப்பட்டுத் தமிழின் வளர்ச்சிக்கும்