|
ஜென்மசஞ்
சிதவிடந் தீண்டி மாண்டதிங்
கென்மதி யிரக்ஷணைக் கினியென் செய்குவேன்
முன்மய வளற்றிடை முழுகி யும்மினும்
நன்மதி படைத்திலே னாச மெய்தவோ.
|
46 |
|
|
|
|
மோகமார்
பிரபஞ்ச மயலின் மூழ்கிலௌ
கீகமார்க் கத்திலே கெடுவ லோவெனாச்
சோகமுற் றுளங்கசந் தழுது துக்கவெஞ்
சாகரத் தழுந்தினான் றரிப்பொன் றின்றியே.
|
47 |
|
|
|
|
அவ்வயிற்
குரவனு மருளி நிற்கொரு
கௌவையின் றாகுக கருணை யெம்பிரான்
எவ்வகைப் பாவமுஞ் சமிப்ப ரேழைநீ
செவ்விசு வாசத்திற் றிடங்கொள் வாயென்றான்.
|
48 |
|
|
|
|
உற்றவிம்
மொழிவழி யுயிர்வந் துற்றெனச்
சற்றுளந் தெறிந்துநம் மிறைவன் தண்ணருட்
பெற்றியை நினைந்தியான் பிழைக்கு மாறினி
இற்றென் நவிற்றுகென் றிறைஞ்சி நின்றனன்.
|
49 |
|
|
|
|
இங்கிவன்
பரிவுறு நிலையு மின்னலுஞ்
சங்கையின் றாகநன் குணர்ந்து தாபத
புங்கவன் வேதிய பொருந்தக் கேளெனாப்
பங்கமின் மதிசில பகரு வானரோ.
|
50 |
|
|
|
|
இந்நெறிப்
படுத்துனை யேய்த்த லௌகிகன்
தன்னையான் முன்னரே யறிவன் சற்பனை
மன்னுமிச் சாபுர வாசி நன்னெறி
துன்னியோர்க் கவமதி புகலுஞ் சூழ்ச்சியான்.
|
51 |
|
|
|
|
சாலமே
மிகுதரு மாபு ரிக்குவந்
தாலயம் புகுந்துமெய் யடிய ராமெனக்
காலையு மாலையும் பரவு கைதவன்
ஞாலமீ திசையலா னாட்ட மொன்றிலான்.
|
52 |
|
|
|
|
மீயுற
வேதியர் வேடந் தோன்றிடும்
வாயுற மறைத்திரு வசனம் வந்திடும்
வீயுறா வறுவகை விகார மும்மலந்
தீயுறு மனத்திடைச் செறிந்து நிற்குமால்.
|
53 |