|
இத்திறத்
தவன்மதிக் கிசைந்து நண்பநீ
முத்திமார்க் கத்தினை யொருவி முற்றுநஞ்
சத்திய வாசக ருரையைத் தள்ளிய
தெத்திறப் பாதக மிதயத் தோர்தியால்.
|
54 |
|
|
|
|
எந்தைநா
மத்தினா லென்னி மித்தமாய்த்
தந்தையைத் தாயைத்தம் மனையைத் தாம்பெறு
மைந்தரை யுடன்பிறந் தவரை மற்றினிச்
சொந்தமாம் ஜீவனைத் துறந்தி டாவிடில்.
|
55 |
|
|
|
|
தன்னொரு
சிலுவையைத் தாங்கித் தாங்குமென்
தன்னொரு வாநெறி பிடித்தி டாவிடில்
தன்னொரு சீடனென் றியைபு றானெனு
தன்னொரு மகனுரை மனத்துக் கோடியால்.
|
56 |
|
|
|
|
வளமலி
யெகிப்துமா நிதிய வைப்பினைக்
களமலி குப்பைபோற் கழிய வீசிநம்
இளவர சுயர்த்திய சிலுவை யேய்ந்தபோழ்
துளமலி காதலோ டுவக்க வேண்டுமால்.
|
57 |
|
|
|
|
இருண்டவன்
மனத்துலௌ கீக னின்சொலான்
மருண்டுசீ யோன்மலை மார்க்க நின்றிழிந்
துருண்டனை பாதலத் துய்க்கு மிந்நெறி
தெருண்டிதை விடுத்தியேற் பிழைத்தி சீரியோய்.
|
58 |
|
|
|
|
நல்லறக்
கிழவனோ ரடிமை நல்கிய
கல்லிய னெஞ்சினன் காதன் மக்களோ
டல்லல்கூ ரிருஞ்சிறை யகத்து ளானவற்
கொல்லுமோ பவச்சுமை யுனக்கொ ழிக்கவே.
|
59 |
|
|
|
|
கற்பனா
தீதராங் ககன வேந்தன்முன்
சற்பிர மாணத்தைத் தழுவி நின்றெவன்
பொற்புறு நீதிமா னான புங்கவன்
எற்படு முலகிடை யாண்டு மில்லையால்.
|
60 |
|
|
|
|
முன்னரே
விதிவிலக் கிகந்து முன்னருந்
துன்னெறி யொழுகியோர் தூய ராவரோ
நன்னெறிப் படினும்பின் நன்கு மூழ்கினும்
பொன்னிறம் வாயசம் புணரு மேகொலாம். |
61 |