பக்கம் எண் :

102

  கள்ளஞா னியரிவர் கழறும் வார்த்தையில்
எள்ளள வும்பய னிலைமற் றென்மொழி
உள்ளவா றென்பதற் குயர்ந்த வானமும்
பள்ளநீ ருலகமும் பகருஞ் சான்றரோ.
62
   
  சான்றென மொழிந்திடு தருணந் தம்பிரான்
தோன்றியிங் குரைத்தகற் பனைகள் சோர்வற
ஊன்றிநின் றொழுகியீண் டுய்வல் யானென
ஏன்றவன் சாபமே யெய்தி மாள்குவன்.
63
   
  என்றிடி யேறென விசைத்த வாசகந்
துன்றிய கொழுங்கனற் சுவாலை மீக்கொள்வெங்
குன்றினின் றெழுந்துளங் குலையும் வேதியன்
தன்றுணைச் செவிவழி புகுந்து தாக்கிற்றால்.
64
   
  தாக்கலுஞ் சாவலாற் றனக்கு வேறினிப்
போக்கிலை புறத்தொரு புகலு மின்றெனா
வாக்கொடு மனந்தடு மாறி வாய்வெரீஇ
மீக்கிள ருயிர்ப்பொடும் விளம்பு வானரோ.
65
   
                   வேறு
   
  வஞ்ச லௌதிக வாய்மொழி யாங்கொடு
நஞ்ச நுங்கிம யங்கியெ னன்மதி
துஞ்சி யாருயிர் சோர்குவ னாலினி
உய்ஞ்சி ருக்கவொ ருமருந் துண்டுகொல்.
66
   
  ஈசன் கோபமெ ரிக்குமென் றேழையேன்
நாச தேசந்து றந்தது நன்மனைப்
பாசம் வீசிய பான்மையு மித்தனை
மோச மெய்திமு ழங்கனன் மூழ்கவோ.
67
   
  மேதை யற்றவி வேகம்மி குத்தவோர்
பேதை யென்னிற்பி றரிலை பெட்புறும்
ஊதி யத்தையொ ரீஇயுல வாப்பெருஞ்
சேத மெற்கெனக் கொண்டதி றத்தினே.
68
   
  பாதை விட்டுநம் பார்த்திவ னாணையைப்
பேதை நீபிழைத் தாய்பெருங் குற்றமென்
றோதி யென்னையு வர்க்குமு ளக்கரி
வாதை கொண்டுயிர் வாழ்வதெவ் வாறினி.
69