பக்கம் எண் :

103

  தம்பி ரானருட் சார்வினைச் சார்ந்துய்வான்
நம்பி வந்துக டைத்தலை நண்ணுமுன்
வம்பு துற்றிய வார்த்தைக்கி ணங்கியே
கொம்பி ழந்தகு ரங்கென லாயினேன்.

70
   
  மச்சை யென்புவ ழும்புகொ ழுந்தசைத்
துச்சி னச்சியு வக்குந்து ரிச்சையைச்
சிச்சி யென்றுவர்க் காதுதி யங்குமென்
கொச்சைத் துன்மதி யேகொடுங் கூற்றன்றோ.
71
   
  ஈச நேசமோ ரெட்டுணை யும்மிலேன்
நாச தேசசு கத்தினை நாடுவேன்
நீச னேனென்னி கழ்த்துவ தீண்டெனாக்
கூசிக் கூசியி னையன கூறுவான்.
72
   
  ஐய னேயென்ன ருட்குரு வேபுகல்
மெய்யி கந்தும ருண்டுவி ழுந்துபின்
பொய்யின் மூழ்கிப்பு லைக்குடி லோம்புவேற்
குய்யு மாறினிச் செய்வதொன் றுண்டுகொல்.
73
   
  பரவை யென்னப்ப ரந்துப ருப்பத
நிரைக ளென்னநி மிர்ந்தது நீள்கடற்
கரைம ணற்கும திகங்க ணக்கியான்
தரையி லீட்டிய பாவச மூஹமே.
74
   
  ஆவி நாயக னாணையை மீறிய
பாவி யேற்கொரு பாங்கரும் போக்கிலை
ஜீவ வாயிலைச் சென்றுநின் றோலிடிற்
போவென் றெள்ளிப்பு றந்துரப் பார்கொலோ.
75
   
  வள்ள லார்பிழை மன்னிக்க வேதிரு
உள்ள மென்னவு ரைத்தனை யாயினும்
விள்ள ரும்பெரும் பாவம்வி ளைத்தவிக்
கள்ள ரிற்கள்ள னுக்கருள் காட்டுமோ.
76
   
  உன்ன ருஞ்சுமை யோடுமோ ரோசனை
முன்னர் நாறுமு டைத்தொழு நோயொடும்
பன்ன ரும்பரி சுத்தநம் பார்த்திவன்
சந்நி திக்குமுன் னிற்கத்த குவதோ.
77