|
உள்ளு
டைந்துரு கிக்கவன் றொண்கணீர்
துள்ளி கொள்ளத்து டித்திவை வேதியன்
விள்ள லஞ்சுவி சேடன்வி ருப்பொடுங்
கள்ள மின்றெனக் கட்டுரை கூறுவான்.
|
78 |
|
|
|
|
தம்பி
கேட்டிநீ சத்திய வாசகர்
இம்ப ரீட்டிய பாதையி கந்ததும்
நம்பி மற்றொரு மார்க்கந யந்ததுங்
கும்பி பாகங்கு டிகொளும் பாதகம்.
|
79 |
|
|
|
|
பாப
முற்றிய பாதகர் மெய்ம்மனத்
தாப முற்றித்த விப்புறு வாரெனிற்
சாப வெஞ்சிறை யிற்றளை வாரலர்
கோப முள்ளவ ரல்லர்கு ணக்கடல்.
|
80 |
|
|
|
|
நீதி
யாதிபர் நிண்ணயர் தம்மொழி
பேதி யார்நம்பி ரானெனப் பேசியும்
மாத யாபர வள்ளலெ னாமறை
ஒது சீர்த்தியு முண்மையென் றோர்தியால்.
|
81 |
|
|
|
|
எண்ண
ருங்குணத் தெம்பெரு மான்சுதன்
புண்ணி யந்திகழ் யாக்கைபொ றுத்திவண்
நண்ணி நல்லற நாட்டிய ஞான்றுசொல்
வண்ண வாசக மற்றதுங் கேட்டியால்.
|
82 |
|
|
|
|
வருந்திப்
பாரஞ்சு மக்குமக் காண்மனந்
திருந்தி யென்வயிற் சேருமின் சேருமின்
பொருந்து நுஞ்சுமை போக்கிவி டாயகன்
றிருந்து வாழவி னிதரு ளீவன்யான்.
|
83 |
|
|
|
|
என்ற
வித்திரு வாக்குல கம்மெலாம்
பொன்று மாயினும் வானிடைப் போதரீஇ
நின்ற ஜோதிநி லையற்று வீழினுங்
குன்றி டாதுன்னு ளத்திது கொள்கெனா.
|
84 |
|
|
|
|
மற்று
மின்னநல் வாக்குவ குத்துரைத்
துற்று நோக்கியொ ளிர்கடை வாயிலை
முற்றி நின்றுமு றையிடு வாயெனிற்
குற்றம் யாவும்பொ றுப்பர்நங் கொற்றவன்.
|
85
|