பக்கம் எண் :

105

  போதி யென்றுபு கன்றுநல் லாசிகள்
ஓதி னான்சுவி சேடனுக் குள்ளுவந்
தேதில் வேதிய னும்மிது நன்றெனக்
காத லோடுகு வித்தனன் கைம்மலர்.
86
   
                லௌகீகப்படலம் முற்றிற்று.
                       ________________
   
 
கடைதிறப்புப் படலம்
 
   
 

நள்ளுண் டாலுந லம்மஃ தன்றெனில்
எள்ளுண் டாலுமி ழிபுலை யன்னெனத்
தள்ளுண் டாலுந்த யாபதி சித்தமென்
றுள்ளுண் டாலுவொ ரூக்கமோ டேகினான்.

1
   
  குன்று காலும்வெஞ் சாபக்கொ ழுங்கனல்
முன்றி னின்றுமு டுகிச்சு ரஞ்செலீஇ
வன்றொ டர்ப்படு மான்விடு பட்டெனச்
சென்று கூடினன் முன்விடு செந்நெறி.
2
   
  ஊன்ம னத்திரு ளோடத்து ரந்திடும்
ஆன்ம ஞானத்த விரொளி நாடியக்
கான கத்தெவை யுங்கரு தாதுபோய்
வானு றுங்கடை வாயிலை நண்ணினான்.
3
   
  இடுக்க வாயிலெ திர்ந்தத னுட்புக
அடுக்கு மோவெனக் காசையை வேரறப்
படுக்கு நர்க்கும்ப ருமித்த தூலத்தை
ஒடுக்கு நர்க்கும லாலென வுள்ளினான்.
4
   
  உருக்கு மாரரு ளோங்கிய வேந்தனோர்
திருக்கு மாரனைச் சிந்தையு ளேதரித்
திருக்கு மாரண ரேயிக லியாவையும்
ஒருக்கு மாற்றல ரொல்லும வர்க்கரோ.
5
   
  திருடர் வஞ்சகர் காமிகள் செல்வமார்
திருடர் மற்றோரு ரிமையைக் கொள்ளைகொண்
திருடர் கோபிகண் மூர்க்கர்கு தர்க்கராம்
திருடர்க் கீண்டுபு கலரி தாகுமால்.
6