பக்கம் எண் :

106

  என்று சிந்தித்த ருகுற வேழைகாள்
நின்று தட்டுமி னீங்கிடு நீள்கத
வென்று பித்தியெ ழிலுறத் தீட்டிய
மன்றல் வாசகங் கண்டும னக்கொளா.

7
   
  திட்டி வைத்தனர் தேவர்பி ரானென
உட்டெ ளிந்துணர் வொன்றியொ டுங்கியே
கிட்டி யாங்குகி ளர்பொற்க பாடத்தைத்
தட்டி னானின்றி னையன சாற்றியே.
8
   
                 வேறு
   
  மாய வுலக மயக்கறுத்து வரையாக் கிருபை தந்தளித்த
தூய பெருமான் றிருவடிக்குத் தொழும்பன் கபாடந் திறமினோ.
9
   
  ஆசா பாசக் கொடுஞ்சுழலி லகப்பட் டுலைந்தே னருளணுக
நாச தேசந் துறந்துவந்தே னாயேன் கபாடந் திறமினோ.
10
   
  உள்ளந் திரும்பிக் குணப்படுமி னுய்வீ ரென்ன வுவந்துரைத்த
வள்ளல் திருவாக் கதுகேட்டு வந்தேன் கபாடந் திறமினோ.
11
   
  கல்லேன் சுருதி நலம்புரியக் கருதேன் பாவங் கசந்திடேன்
பொல்லேனெனினும் வந்தடைந்தேன் போகேன் கபாடந்
                                        திறமினோ.
12
   
  ஆறாக் கொடிய பசிதாக மடங்கத் தணிய வருளளிக்கும்
மாறாக் கருணை வரதன்பால் வந்தேன் கபாடந் திறமினோ.
13
   
                          வேறு
 
  பாவ மீறிவளர் காடு துற்றியலை பட்ட ழுங்கியயர் பாவியான்
ஜீவ மாநதியி னீர ருந்தவதி தேட்ட முண்டுகடை திறமினோ.
14
   
  நீதி யாதிபர்சி னந்த ஹிக்குநெறி நின்று தப்பியிநெ றிப்படீஇ
மாத யாபரன டித்தொ ழும்புசெய வந்த பாவிகடை திறமினோ.
15
   
  சேரு மாகொடிய தீவி னைத்திரள்சு மந்தி ளைத்தளிகொள்
                                           ஜீவநற்
றாரு நீழலிலொ துங்கி யுய்யவரு தமியன் யான்கதவு திறமினோ.
16
   
  கொடிய ரிற்கொடிய புலைய ரிற்புலைய னாயி னுங்குமர நாயகன்
அடிய ருக்கடிய னாக வந்திவண டைந்த னன்கதவு திறமினோ.
17
   
  நிருப னீதியினி லத்தி ழிந்துபலி நேர்ந்தி ரக்ஷையரு ணேமியாஞ்
சருவ லோகசா ணியனை நம்பிவரு தமியன் யான்கதவு
                                         திறமினோ.
18