|
வேறு |
|
|
|
|
|
இன்னவித
மாகவுரை யாடியெழி லாரும்
வன்னமணி வாயில்செறி மாண்கதவு தட்டி
உன்னிநனி யோலமிட வுள்ளுருகி யுள்ளா
மன்னுகடை காவலன்ம ருங்குறவ ணைந்தே.
|
19 |
|
|
|
|
எஞ்சலிலு
ணர்ச்சிபரி தாபமித யத்தில்
விஞ்சவுள மற்றதிவன் வாய்மொழிவி ளக்கும்
வஞ்சமில னாமெனம னக்கொளம தித்தே
அஞ்சலென வொல்லையின ருட்கடைதி றந்தான்.
|
20 |
|
|
|
|
வாயில்திற
வுண்டிடம லர்ந்தவன சம்போல்
நேயன்வத னந்திகழ நேயமொடு நோக்கி
ஆயெனவெ திர்ந்தனையெ னையவிவண் வெய்ய
தீயன்வர வொல்வதுகொல் யாதுனது சித்தம்.
|
21 |
|
|
|
|
என்றுவின
வக்கடுகி யீண்டுவரு கென்ன
முன்றிலி னகத்துறவி ழுத்துமுறை யாகப்
பொன்றிணிக டைத்தலைய டைத்துநனி பூட்டிப்
பின்னையிது கேளெனவி யப்பினொடு பேசும்.
|
22 |
|
|
|
|
நெருக்குறுமிவ்
வாயில்புகநேடிவரு வோரை
வெருக்கொளவே ருட்டிவிசி கம்பலவி டுத்தே
மருக்குமல கைக்கிறைவன் மொய்ம்பினொடு தங்குந்
துருக்கமித னுக்கருகு தோன்றுவது காண்டி.
|
23 |
|
|
|
|
இங்கபய
மிட்டகுரல் யாதெனவே திர்ந்தே
அங்கவன்வெ குண்டுனைய டர்த்துயிர ழித்து
நுங்குவனெ னக்கருதி நொய்தினிலி ழுத்தேன்
சங்கையற வுன்னிலைத னைப்புகறி யென்றான்.
|
24
|
|
|
|
|
நேசனுரை
கேட்டுளந டுங்கியிவ ணேர்ந்த
மோசமக லத்துணைபு ரிந்தசெயன் முன்னிப்
பேசரிய பேரருள்பி றங்குபிணை யாய
ஈசனைவ ழுத்தியிதி யம்புவன்வி சாரி.
|
25 |
|
|
|
|
வெய்யவல
கைக்கெனைவி லக்கியுயிர் வீயா
துய்யவிவ ணுய்த்தவுத விக்குதவி யுண்டோ
ஐயவுத வாதொருவ ராற்றுமுத விக்கு
வையகமும் வானகமு மாற்றலரி தாமால்.
|
26
|