பக்கம் எண் :

108

  ஆதலின ருங்குரவ நிற்குதவு கைம்மா
றேதுமிலை நிற்கிரியை யாவுமறி தக்க
மாதகைய வேந்தனருண் மல்கிடுமு னக்கென்
றோதியளி யேனிலையு ரைப்பலினி யென்னா.

27
   
  விளம்பர மடுத்ததும்வெ ருண்டுமனை மக்கட் குளம்படவு ரைத்ததுமொ ரீஇமதிம யங்கித்
தளம்பியது மாங்குசுவி சேஷனுரை தந்து
வளம்பெறவி டுத்ததுமிவ் வாயிலுறு கென்று.
28
   
  பெருஞ்சுமையொ டேவழிபி டித்ததுமென் னெஞ்சன்
விரும்பியுடன் வந்துநொதி வீழ்ந்துளம்வெ ரீஇப்பின்
திரும்பியது மன்றுதவி செய்துகரை யேற்றி
உரம்பயில்ச ஹாயன்விவ ரித்ததுமு ணர்ந்தே.
29
   
  உவப்பொடுவ ரும்பொழுது லோகவிவ காரி
அவப்பயனெ னக்குறுகி யாரணிய முய்க்க
நிவப்புறுகி ரித்தலைநெ ருங்கியது நேர்ந்த
தவப்புயனெ னச்சுருதி தந்தமுனி வந்தே.
30
   
  மீண்டுவழி பற்றெனவே குண்டுமதி சொல்லித்
தூண்டியினி மற்றவைது லங்கவொளி துன்னுங்
காண்டகுக டைத்தலைக ழித்தறிதி யென்ன
ஈண்டியது மிவ்வெனவே டுத்தினிதி யம்பி.
31
   
  பின்னிடுமென் னெஞ்சனிலை பேசுவதெ வன்கொல்
மன்னுசுவி சேஷகன்ம றுத்தெதிர்வ ரானேல்
என்னிலைவி ரைந்துகெடு மெங்குரவ வெல்லாம்
உன்னதவ ருட்டுணையி லுற்றநல மென்றான்.
32
   
  ஆத்துமவி சாரிவர லாறினிது கேட்டே
மாத்தகைய வேந்தனைவ ழுத்தியுண்ம கிழ்ச்சி
பூத்தினைய சொன்மதிபு கட்டிடுவ தானான்
காத்துவழி காட்டுகடை காவலன வற்கே.
33
   
  மீக்குலவு முத்திநக ரத்திறைவன் மேனாட்
கோக்குமா னைப்பலிகொ டுத்துநமை வேண்டி
வாக்குமன மெட்டரிய மாபரசு கத்தை
ஆக்கினர தன்னருமை யார்புகல வல்லார்.
34