பக்கம் எண் :

109

  இத்தகைய சிற்சுகமி யைந்திடவி ழைந்தோர்
பித்துலக நச்சுறுபி ராந்தியைவி டுத்தே
செத்தொழியு மாறிழியு டற்குவரு சேதம்
எத்துணைய வாயினுமொ ரெட்டுணையு மெண்ணார்.

35
   
  உகப்புறுபெ ருங்கிளையொ டேயுரிமை யுள்ள
இகப்பயனெ வற்றையுமி கந்திறைவ னுக்கே
அகப்பலிகொ டுத்தனன தன்றியொரு பேறாம்
மகப்பலிகொ டுக்கவும் றுத்திலனோர் வள்ளல்.
36
   
  இந்நிலம்வி யந்திடுமெ கிப்திறைமை பூண்ட
மன்னுரிமை யாவையும னக்கொளவ ரைந்தாண்
டின்னலுறு தன்கிளையோ டெண்ணில்பல துன்பும்
பன்னரிய நிந்தையுமு ழந்தனனோர் பத்தன்.
37
   
  துங்கவுல காதியர்து ணைப்பதம லாலென்
அங்கமரி யப்பெறினு மாவியுகு மேனும்
எங்கனவி லும்பிறவி றைஞ்சுகில னென்னாச்
சிங்கமுறு வெங்குகைமு டங்கினனோர் தீர்க்கன்.
38
   
  இந்தனம டுக்கியவி ருங்கொடிய சூளைக்
கொந்தழன்ம டுத்தவிறை கோபமென மூண்டு
வெந்தெரிய வத்தழலில் வீசியெறி போதுஞ்
சிந்தனைக லங்கிலர்தி டங்கொளுமுச் சித்தர்.
39
   
  அல்லியன்ம னத்தினர மார்க்கவெறி கொண்டு
வல்லியமெ னக்குழுமி வன்கன்மழை சிந்திக்
கொல்லியம லைந்துமொரு கோட்டமில னாகி
நல்லியன்மொ ழிந்துயிர்வி டுத்தனனோர் நம்பன்.
40
   
  நாடுநகர் காடுகட லாறுபல நண்ணி
நீடுபல மோசமடி நிந்தையெறி காவற்
கூடமெனு மாகொடிய கூறரிய சாவின்
பாடுபல பட்டனனோர் பத்திவயி ராக்யன்.
41
   
  அம்புவியு வந்தலைய கந்தையர்கு ரைத்த
வம்புமொழி யைப்புரியு பாதியைம திக்கா
தும்பர்மகி மைத்திறமு வந்துயிர்வி டுத்தார்
செம்பொருள்தெ ரித்தகுரு தேசிகர்ஜெ கத்தில்.
42