பக்கம் எண் :

110

  கல்லெறிக டுஞ்சிறைக சப்புமொழி கட்கம்
நல்குரவு வாரடியில் நைந்துயிர்ந டுங்கப்
புல்லரிய கான்புதர்பொ ருப்புமுழை புல்லி
எல்லையில்க டுந்துயர மெய்தினர நேகர்.

43
   
  இன்னவித மாகவிசு வாசிகளி கத்தில்
பன்னரிய பாடுபல பட்டனர்ப ரத்தே
மன்னுமகி மைக்கெனவ தைந்துயிர்ம டிந்தார்
இந்நிலமி சைக்குருதி யேகரியி யம்பும்.
44
   
  மற்றிதனை யற்பமும தித்திலன்மென் னெஞ்சன்
முற்றுலக சாலவள றூடுமுழு குற்றான்
துற்றுமோர்ந றுங்கனியெ னச்சுவைவி ழைந்தே
பற்றியெரி யுஞ்சுடர்வி ழும்பலப தங்கம்.
45
   
  மிச்சின்மிசை லௌகிகவி காரமுறு குக்கல்
சிச்சியென வோடுமது தேர்கிலைதி கைத்திட்
டச்சுறுகு ரைப்பைநனி யஞ்சினைய மார்க்கப்
பிச்சரென வேகினைபி றங்கல்வழி பேணி.
46
   
  அந்நெறிபி டித்துயிர விந்தவ ரநேகர்
செந்நெறிக தித்தசிம யஞ்சிதறு தீயால்
தொன்னெறிவி ளக்குசுவி சேஷநெறி தூய
இந்நெறிவி டுத்தவரீ டேறும்வகை யின்றால்.
47
   
  வெவ்வியக ராவயிறு புக்கியுயிர் மீண்ட
செவ்வியினை யொத்திவணி றுத்தனைசி றாரைக்
கௌவியலை பூசைமுறை காண்டியது போலுந்
தைவிகம காகிருபை தாங்குவது நம்மை.
48
   
  ஆதலின ருந்துணைவ வாற்றரிய சும்மை
சோதனைய லக்கணிடர் துற்றியடு போதும்
ஆதிமுதல் வன்றிருவ ருட்டுணைய வாவி
மேதகைய ஜீவநெறி விட்டுவில கேலே.
49
   
  என்றினைய வாறுசொலி யெம்பியிது மார்க்கம்
வென்றியர சன்பணிவி திப்படிபி தாக்கள்
நன்றியறி தீர்க்கருயிர் நல்குநமி ளங்கோ
பின்றையடி யாரிவர்பு துக்கினர்பி றங்க.
50