|
நேர்வழிநெ
ருக்கவழி நின்மலந கர்க்குச்
சேர்வழிதி கைப்பில்வழி ஜீவவழி சீர்சால்
ஒர்வழியி தன்றியிலை யுண்மைவழி கும்பிப்
பேர்வழிய துற்றலைபி ராந்தரும நேகர்.
|
51 |
|
|
|
|
இக்குறிம
னக்கொடினி யேகுகென வுள்ளம்
நெக்குருகு நேயனொடு வேதியனி கழ்த்துந்
தக்கநெறி சார்வலைய தாங்கரிய தாமிப்
பொக்கணம்வி ழுத்திலது புண்ணியமு னக்கே.
|
52 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
நினை
வில்லைவெரி்ந் மீதறவு மேன்மேல்
ஏறுசுமை யான்மிகவி ளைத்தனனெ னக்கோர்
ஆறுதலு மில்லையினி யஞ்சலென நின்போல்
தேறுதல்செய் வாருமெதிர் வார்கொல்தெரி யேனால்.
|
53 |
|
|
|
|
யாதினியி
யற்றுவலி ரக்ஷைபெற வென்னா
ஓதலும்ம லங்கலையி ருங்குருசு யர்த்த
மாதலம டுக்கினுன வன்சுமடு வல்லே
போதரும லாதொருவர் போக்கமுடி யாதால்.
|
54
|
|
|
|
|
இப்பகல்க
ழிந்திடுமுன் னிந்நெறியி னோர்சார்
மெய்ப்பொருள்வி ளக்குபவன் வீடெதிர்வை யங்குற்
றப்பனுவ லாளனோட மர்ந்துவின வுங்கால்
எப்பரிசு நன்குறவி சைப்பனியல் பென்னா.
|
55 |
|
|
|
|
சோகமற
நன்மொழிதொ கத்தினைய கூறி
ஏகுகென வாசிவிடை யீந்தனன்வி சாரி
ஓகையொடு மஞ்சலியொ ழுக்கமுறை நல்கி
மாகநக ராதிபனை வாழ்த்திவழி போனான்.
|
56 |
|
|
|
|
கடைதிறப்புப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
வியாக்கியானி
யரமனைப் படலம்
|
|
|
|
|
|
|
|
இந்தவா
றாயவன் னேகுமவ் வமைதியில்
உந்துநல் லுணர்வுமுன் னூன்றிநின் றீர்க்கவும்
பந்தமார் தீவினைப் பகுதிபின் னீர்க்கவுஞ்
சிந்தைநொந் தினையன செப்புவா னாயினான்.
|
1
|