பக்கம் எண் :

112

  ஜென்மார் கருவிலே வினைவிடந் தீண்டலால்
நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந்
தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர்
நன்மையே னுஞ்செயத் திறனிலே னவையினேன்.

2
   
  நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ
கான்பிறங் கலினுறுங் கதழ்விடப் பாந்தளில்
ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவே னுணர்விலேன்
ஏன்பிறந் தேன்கொலா மேழையிவ் வுலகினே.
3
   
  அன்னையா யப்பனா யன்றுதொட் டின்றுமட்
டென்னையன் பொடுபுரந் தென்றுநன் றேதருந்
தன்னையே நிகர்வதோர் தம்பிரான் றயைமறந்
தென்னையே முப்பகைக் கீடழிந் தினைகுவேன்.
4
   
  கனிதருந் தருமெனக் கவலுநங் கருணைமன்
இனிதரும் பாதவித் தருவெறிந் திடுகென
முனிதரும் பொழுதினே முடுகுமேன் முடுகுவெந்
தனிதருங் கனல்சுடத் துடிதுடித் தயர்வலோ.
5
   
  ஓரணுத் துணையுநல் லுணர்விலே னுலகுசெய்
கோரணிக் குளமுடைந் திடையுமோர் கோழையான்
ஆரணத் துறைபடிந் தயர்வுயிர்த் திலனினி
மாரணக் கடல்குளித் தயர்வனோ மதியிலேன்.
6
   
  அண்டர்நா யகனையே யவமதித் தலகையின்
தொண்டனாய்ச் செய்ததீ வினையெலாந் துன்னிமுன்
கொண்டலின் றிரளெனக் குழுமிநின் றுரறுமாற்
கண்டிலே னோடியான் புகுதவோர் கரவிடம்.
7
   
  உரவுநீ ருததிசூ ழுலகெலா முய்யநம்
புரவலன் புதல்வனைப் புனிதநீ தியிலிவண்
வரவிடுத் தமையறிந் தினுமெனோ மடமையான்
பரவிநின் றருள்பெறாப் பாவமென் பாவமே.
8
   
  எப்பெரும் பதகரும் மிதயநொந் தேங்கிவந்
தப்பனே பிளைபொறுத் தருளுமென் றடையிலோர்
ஒப்பரும் புதல்வனுக் குருகிமன் னிப்பமென்
றிப்பெருஞ் சுருதிதந் திறைமறந் திடுவரோ.
9