|
ஆற்றருஞ்
சுமையினோ டல்லல்பல் விக்கினங்
கூற்றெனக் குமுறிநின் றுயிர்தெறக் குறுகினும்
ஏற்றுமுன் னிடுவதே கருமமிங் கேழையேற்
கூற்றமாங் கடவுள்வேந் தொருபெருங் கருணையே.
|
10 |
|
|
|
|
என்னவின்
னனபல வின்னல்கொண் டிடையிடைத்
துன்னுநல் லுணர்வொடே சுமைசுமந் தலசியும்
முன்னவன் றிருவருட் டுணைமையான் முன்செலீஇச்
சொன்னவப் பனவன்வீ டணுகினான் றுருசிலான்.
|
11 |
|
|
|
|
மற்றிதே
போலுமால் வாயில்கா வலன்விதப்
புற்றமெய்க் குரவன்வா ழுறையுளென் றுவகைபூத்
தற்றமென் னெனவினா யகநுழைந் தவணுறு
நற்றவக் கிழவனைக் குறுகினா னவிலுவான்.
|
12 |
|
|
|
|
உள்ளவோர்
கடவுள்வேந் துலகயாத் திரிகனான்
வள்ளனின் மொழியினான் மறைபுலப் படும்வழி
தெள்ளிதி னுணர்வையங் கேகெனச் செப்பினான்
கள்ளமில் வாயில்கா வலனெனக் கழறினான்.
|
13 |
|
|
|
|
கேட்டலு
மறைவியாக் கியானிநீ கேவல
நாட்டுயாத் திரிகனோ நன்றுநின் வரவெனா
வீட்டுளங் கங்குறும் விநயபா வனையெலாங்
காட்டுவான் வேதியன் கைபிடித் தேகினான்.
|
14 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
வண்ணவக்
கடிமனை மருங்க ரங்கணைந்
தெண்ணருங் குணத்தபா வனையி யைந்தவோர்
புண்ணிய வுருக்கவின் பொலியத் தீட்டிய
கண்ணடிப் படிவத்தை யவற்குக் காட்டியே.
|
15 |
|
|
|
|
இத்தகைப்
படிவமற் றெம்மை யாளுடை
வித்தக நிருமல விபுத வேந்தனின்
சித்தமே சித்தமென் றுவக்குந் தேசிகன்.
உத்தம சாயலென்றுணர்ந்து கோடியால்.
|
16
|
|
|
|
|
வான்முக
நோக்கிய பயிரின் மன்னுநங்
கோன்முக வின்னருள் குறித்த தோற்றமாம்
ஊன்முக நயனங்க ளும்பர் நோக்குதல்
நூன்முக மதிவலாய் நுணித்துக் காண்டியால்.
|
17
|