|
மெய்யுறுத்
தியதெனச் சிவந்த மெல்லிதழ்
கையுறு புத்தகங் கவினுங் காட்சியீண்
டையுறு முலகருக் கான்ம போதகஞ்
செய்யுறு மார்க்கமென் றறிதி செவ்வியோய்.
|
18 |
|
|
|
|
தூயலோ
வியப்புறந் துதைந்த வல்லிருள்
நாயகன் பதவியை நயந்திம் மாதவன்
மாயவிப் பிரபஞ்ச வாழ்க்கை யாவையுஞ்
சீயெனப் புறக்கணித் தமைதெ ரிக்குமால்.
|
19 |
|
|
|
|
சென்னிமீ
துறவொரு ஜீவ மாமணி
துன்னிய சுடர்விரி மௌலி தோன்றுதல்
பொன்னில வுலகினிற் பொருந்து சிற்சுக
நன்னிலை மகிமையென் றறிதி நம்பிநீ.
|
20 |
|
|
|
|
ஆயிர
மாயிர மரும கப்பெறீஇ
மாயிரு ஞாலத்து வளர்த்து மன்னர்கோன்
சேயுயர் நகர்செலத் தெருட்டி யுய்த்தவித்
தூயவன் சுகிர்தம்யான் சொலுந்த ரத்தவோ.
|
21 |
|
|
|
|
திசைமயக்
கறுத்துமெய வழிதெ ரித்திடும்
வசையறு குரவனிம் மான லாற்புவி
மிசையொரு வனுமிலை விரிந்த காரிருள்
பசையறப் புலருமோ பரிதிக் கல்லதே.
|
22 |
|
|
|
|
என்றதன்
பொருள்விரித் தியம்பி யென்றுமிந்
நன்றிகொண் மாதிரி நயந்து கொள்கெனாச்
சென்றன னவனொடுஞ் சீர்சி தைந்தெழில்
குன்றிவெவ் வியற்றுகள் குழுமு மண்டபம்.
|
23 |
|
|
|
|
மாசறத்
துடையென வொருவன் வந்துநின்
றாசற விளக்கலு மமோக மாத்துகள்
முசியங் கெழும்பலின் மூச்ச டைத்திடத்
தேசிக னறும்புனல் தெளிநங் காயென.
|
24 |
|
|
|
|
மங்குலைம்
பாலுவா மதிமு கந்திகழ்
பங்கஜ லோசனம் பவள வாய்தளிர்
அங்கலுழ் மேனியோ ரணங்கு தூயநீர்
எங்கணுஞ் சிதறிநன் கியற்றி னாளரோ.
|
25
|