பக்கம் எண் :

115

  கண்டனன் யாதிது காட்சி யின்பொருள்
ஒண்டவக் கிழவவெற் குரைத்தி யாலென
விண்டனன் வேதியன் விளம்பன் மேயினான்
பண்டரு மறைப்பொரு டெரிக்கும் பண்ணவன்.

26
   
  தோற்றுமண் டபமிது சுரர்கு லாதிபன்
வீற்றிருப் பதற்கென விரும்பி மேலைநாள்
மாற்றருஞ் சிறம்பினா லமைக்க வந்துபேய்க்
காற்றகம் புகுதலிற் கவின ழிந்ததால்.
27
   
  தீனர க்ஷகன்றரு சுருதித் தெய்வத
ஞானசா ரத்தினா னலம்பெ றாதுநங்
கோனுடம் படிக்கையைக் குலைத்த கொள்கைசான்
மானவ விருதய மாமிம் மண்டபம்.
28
   
  மூசிமற் றதனெழின் முருக்கி மொய்த்தெழு
தூசியுற் பவவினைத் தொகுதி மற்றிதே
மாசிய றீக்குணம் வளர்க்குந் தாய்புரி
ஆசுறு வினைச்கெலா மாதி மூலமால்.
29
   
  துன்னிய துகளறத் துடைத்து நின்றவன்
மன்னிய சற்பிர மாண மாமதி
முன்னிநன் னீர்தெளி முத்த வாணகை
நன்னுத லேசுவி சேஷ ஞானமால்.
30
   
  ஈட்டுதீ வினைப்பய னிருமை யுந்தரு
கேட்டினை யுருமுறழ் கிரியின் சாலமாக்
காட்டிவெங் கனற்குழி கவிழ்க்கு மல்லது
வீட்டினிற் புகுத்துமோ விதிநி டேதமே.
31
   
  எண்படு மருட்சுவி சேஷ மேய்ந்துநம்
புண்படு மிருதயப் புரைக ணீக்கிநற்
பண்பொடு பவித்திரப் பத்தி வித்திமெய்
விண்படு போகத்தை விளைக்கு மாலரோ.
32
   
  திருவரு ளாளர்க்கு ஜீவ வாசனை
தருவது புலைநெறி தழுவி யோர்க்குமன்
வெருவரு மரணவா சனைவி ளைப்பது
நிருமலன் றருசுவி சேஷ நீர்மைகாண்.
33