பக்கம் எண் :

116

  பாவதா ருவையறப் படுக்குங் கோடரி
ஜீவதா ருவிலெழு தெய்வ மாக்கனி
தேவதூ தரும்வியந் தேத்து செம்பொருள்
பூவுல குயவரு புனிதன் புத்துரை.

34
   
  ஆன்மநோ யகற்றுசஞ் சீவி யன்பர்க்குத்
தேனினு மினியதீஞ் சுவைய தெள்ளமிர்
தூன்மனத் திருள்கெட வொளிரு மொண்சுடர்
வானவர் கோமகன் மதுர வாய்மொழி.
35
   
  பாவியென் றுணர்ந்துபுண் பட்ட நெஞ்சர்க்குத்
தேவநீ தியின்வருந் திகிலை மாற்றிடுந்
தாவரு நித்யஜீ வனையுந் தந்திடுந்
தீவினை யறவரு செம்மல் வாசகம்.
36
   
  துன்பெனுந் தீச்சுடச் சுழன்று சோர்வுறும்
அன்பருக் கவ்வன லவிக்கு நித்யபே
ரின்பவா ரிதிவிசு வாசிக் கின்னுயிர்
நம்பெரு மானிவண் நவின்ற வாசகம்.
37
   
  தீர்த்தனோ டாதியிற் றிகழ்ந்து தெய்விக
வார்த்தையாய்ப் புவிக்கொளி மருவ மானிட
மூர்த்தியாய் விளங்கிய முனைவன் றந்தநூற்
சீர்த்தியை யாவரே தெரிக்கு நீர்மையார்.
38
   
  மற்றிதை மனக்கொளென் றுணர்த்தி் மாடொரு
சிற்றறை புகுந்தனன் றெரியக் காட்டினான்
புற்றுறை யரவெனப் புழுங்கு மாத்திரன்
செற்றமில் சாந்தனென் றிருவர் சீரினை.
39
   
  சாந்தனென் றுரைபெறு தகைமை யோன்முகஞ்
சேந்தொளிர் மரையெனத் திகழும் பான்மையும்
பூந்துணர் கரிந்தெனப் பொலிவி ழந்தகங்
காந்துமாத் திரன்முகங் கரிந்த பான்மையும்.
40
   
  கண்ணுற நோக்கினன் கருதி வேதியன்
உண்ணிகழ் வனமுக முரைக்கு மென்னினும்
எண்ணுறுங் கலைவலோ யிவர்கு ணாகுண
நிண்ணயம் புலப்பட நிகழ்த்து வாயென்றான்.
41