பக்கம் எண் :

117

  வளம்படு கோனகர் மருவத் தீவினைக்
களம்படு முலகினைக் கடிந்து காவலன்
நளம்படு மலர்ப்பத நயந்த நண்பநின்
உளம்பட வுரைப்பலென் றுரைத்தன் மேயினான்.

42
   
  இருவருஞ் சோதர ரெனினு மீங்கிவர்
கருமமும் விநயமுங் கருத்தும் வேறதாம்
மருமலி வனசமும் வறிய வாம்பலும்
ஒருவழிப் பிறப்பினு மொக்கு மேகொலாம்.
43
   
  அத்தனா நின்றெமக் கருளு மாண்டவன்
சித்தமே யாகவென் றமையுஞ் செவ்விய
உத்தம னிவனவன் கனிட்ட னொள்ளிய
வித்தக வைதிகர்க் குவமை மேவியோன்.
44
   
  இவ்வியற் சுடுமுக னியல்பென் னென்றியேற்
செவ்விய ரொழுக்கினைச் சிதையக் கூறிமா
வெவ்வியற் றீவினை விளைக்கு மாத்திரன்
அவ்விய னரும்பொறைக் கசட னாமிவன்.
45
   
  நித்தனா ரருட்செயற் கமைந்து நின்றிடாப்
பித்தனெத் துணைப்பொருள் பெறினும் பாழிலே
உய்த்திடு பேதைவன் மிடிவந் தொன்றுமேல்
மத்துறு தயிரென மறுகுஞ் சிந்தையான்.
46
   
  கல்வரைப் புறங்கட னாடு கான்செலீஇ
ஒல்வகைப் பொறையொடு முஞற்றி யொள்ளிய
பல்வகைப் பொருள்குவித் தருத்தும் பண்புடைச்
செல்வரைக் கண்டுகண் டெரியுஞ் சிந்தையான்.
47
   
  தாழ்வுகண் டுவப்பதை யலது தம்மின
வாழ்வுகண் டுவக்கிலா தெரியும் வன்கணான்
பாழ்வயி றோம்புவா னலது பாதலத்
தாழ்வினைக் ககன்றுயு மாற்றை யோம்பிடான்.
48
   
  கான்முதிர் கடுவயின் றினிய கன்னலைக்
கூன்முது கிரவண முவர்க்குங் கொள்கைபோல்
நூன்முறை தெரிந்தவர் நுவலு நோன்மைசால்
ஆன்மபோ தகமிவற் கருவ ருப்பரோ.
49