பக்கம் எண் :

99

  புரவல னருண்மொழி புகட்ட வல்லவோர்
குரவமெய் யறிவினைக் கொளுத்தி யேகென
வரவிடுத் தாய்கதி மார்க்கத் தேயெனை
உரவுநீ ணிலத்தெவ ருனையொப் பாவரே.

38
   
  நின்னுரை கடைப்பிடி யாது நீசனேன்
இன்னலுக் கிடைந்திவ ணிறுத்த வென்பிழை
தன்னையுஞ் சமித்தெனைத் தாங்குன் கையடை
இன்னருள் சுரத்தியென் றினிதி னேத்தினான்.
39
   
  வேதிய னின்னணம் விளம்ப வித்தகன்
பாதகம் பாதகம் பார மார்த்திக
வேதநன் னூனெறி விழைந்தி டாதொரு
காதக னுரைவழிக் கவிழ்தல் காண்டியால்.
40
   
  எவ்வமில் பாமராஜ் ஜியத்தை யெய்துமுன்
தெவ்வள விலாதுனைச் சேர்த றிண்ணமால்
இவ்வள வினின்மலைந் திடைந்து பின்னிடில்
அவ்வள வையுமெதிர்த் தடர்ப்பை யேகொலாம்.
41
   
  பொய்யுரை யாதநம் புரவ லன்றிரு
மெய்யுரை மனக்கொளீஇ விசுவ சித்திடா
தையுறு மனர்த்தமே யாதி மூலமன்
செய்யுறு தீவினைக் கென்பர் சீரியோர்.
42
   
  கோதிலா மெய்விசு வாசங் கொண்டுநன்
நீதிமா னானவன் பிழைப்ப னீத்திடும்
பேதைபால் யானிரேன் பிரிய மாயெனும்
ஆதிநா யகனுரை யறிந்து கோடியால்.
43
   
  சருவலோ காதிபன் சாற்று மாற்றமும்
திருவரு ளடைந்துயு நெறியுந் தீர்ந்துநீ
பெருவழி பிடித்தனை பேதுற் றாதலில்
ஒருவருங் கேடுனக் குறுவ துண்மையால்.
44
   
  இன்னவா றுரைத்தசொல் லேதில் வேதியன்
தன்னிரு செவித்தொளை புகுந்து தைத்திட
மின்னுரு மேற்றினை வெருவிப் புற்றுறை
பன்னகம் பதைத்தெனப் பதைத்து வீழ்ந்தனன்.
45