| |
அதிபதி
கனன்றுவந் தருளி மேலைநாள்
விதிநிடே தங்களை விதிக்கப் பெற்றது
கதியையு நரகையுங் காட்டு கிற்பது
முதியசீ னாயென மொழிபெ யர்த்தது
|
30 |
| |
|
|
| |
இம்மலைச்
சாரலை யெதிர்ந்து வேதியன்
அம்மவி தென்னென வகந்தி கைத்தனன்
விம்மின னுயிர்த்தனன் வெருண்டு நின்றனன்
மும்மடங் காயது முதுகின் சும்மையும்.
|
31 |
| |
|
|
| |
ஒம்புகென்
றுணர்த்திய வொளியை நீத்திவண்
கூம்பிறு கலமெனக் குலைந்து யங்கினான்
தேம்பிநின் றழுதனன் றெருமந் தான்மலைப்
பாம்பின்வாய்த் தேரையிற் பரியும் பான்மையான்.
|
32 |
| |
|
|
| |
மலைமிசைக்
குவடிடிந் துருண்டு வல்லையே
தலைமிசை விழுந்திடுந் தப்பி யுய்வழி
இலைபிறி தினியென வினைவுற் றேங்கினான்
அலைமிசை தருதுரும் பனைய நீர்மையான்.
|
33 |
| |
|
|
| |
மாற்றடி
பெயர்க்கவு மனந்து டித்தனன்
வீற்றுவீற் றுகுகனல் வெதுப்ப மாழ்கினன்
கூற்றிது வாமெனக் குறுகி னானுயிர்
ஆற்றலோய்ந் தறிவிழந் தலமந் தானரோ.
|
34 |
| |
|
|
| |
ஆயிடை
முன்னிவற் ககந்தெ ருட்டிய
நேயமார் தருசுவி சேட னேர்ந்துநீ
தூயமெய் யொளிதிகழ் சுருதி நூனெறி
மேயிடா திகந்ததென் விளம்பு வாயென்றான்.
|
35 |
| |
|
|
| |
கண்டனன்
கருணையி னுருவைக் கண்களால்
உண்டனன் செவிவழி யுரைச்சஞ் சீவியைப்
பண்டைநல் லுணர்வுவந் தணுகப் பாங்குறுங்
கொண்டலை யிருகரங் குவித்தி றைஞ்சியே.
|
36 |
| |
|
|
| |
நொதியிடை
விழுந்துயங் கியது நுண்ணிய
மதியுடைச் சஹாயன்வந் துதவு மாட்சியும்
எதிரிலௌ கீகனவந் திசைத்த மாற்றமுஞ்
சதிவழி புகுந்ததுஞ் சமையச் சாற்றிமேல்.
|
37 |