பக்கம் எண் :

97

  நற்றாபத னெம்முயிர் நாயகன் நல்ல நீதி
பற்றாதொரு பத்துவி தித்துணை பற்றி முத்தி
உற்றாருயிர் பெற்றுல வாநல முண்ணு மென்றல்
கற்றூண்டழு விக்கட னீந்தல்க டுக்கு மாதோ.

22
   
  விண்ணாடடை யுந்நெறி யோடுமி ளிர்ந்து தோன்றிக்
கண்ணாடுக வின்சுட ருங்கரு தாது போக்கி
மண்ணாடுத டத்தொரு சார்மலைச் சார லூடு
புண்ணாடிய நெஞ்சொடு வேதியன் போயி னானே.
23
   
                வேறு
   
  வாழிய வானுற நிமிர்ந்த மாண்பது
பாழியங் குவடொரு பத்து மிக்கது
தாழிரும் பொறைநனி சமழ்த்த லாற்றிரை
ஆழிசூழ் புவிமுது காற்றொ ணாதது.
24
   
  கருமுகிற் கணம்புடை கஞலுங் காட்சிய
துருமின முழக்கமிக் குரறுங் கோட்பது
நிருமலன் றிருக்கர நீதிப் பட்டயம்
பொருமொளி மின்குழாம் பொலியும் பொற்பது.
25
   
  துப்புறழ் முடித்தலை கவிந்த தோற்றத்த
தெப்புறத் தினுநனி யிருந்தை யாரழற்
குப்பையை யிறைப்பது குலவு நீணெறி
தப்பிடி லதோகதித் தலத்தி லுய்ப்பது.
26
   
  தன்னுறு வழிப்புகூஉத் தவறி னோர்தமை
முன்னுறு மிருட்சிறைப் படுக்கு மொய்ம்பது
மன்னுறு வழிகடைப் பிடித்த மாந்தர்க்கும்
பன்னுறு திகில்பல விளைக்கும் பண்பது.
27
   
  வசையற விளங்கிய மாட்சித் தாயினும்
பசையறப் புலர்ந்தது பரவை மாநிலத்
திசையுற விவ்வழி யேகு வோர்தலை
மிசையுறக் கவிழ்ந்திடுங் குடுமி மேலது.
28
   
  துன்னரு நெறியது துணுக்க முள்ளது
பன்னருந் தரத்தது பவித்தி ரத்தது
மன்னொரு சுதனலான் மநுக்கள் யாரையுந்
தன்னடிப் படுக்குறுந் தகைமை சான்றது.
29