|
உன்போன்மரு
ளுற்றுழன் றார்பல ருய்யும் வண்ணம்
வன்பாரம கற்றினன் மற்றிதின் வண்மை யுண்டே
இன்பாலடி சிற்கலம் வீசியி ரந்து நிற்கும்
புன்பான்மையி தியாண்டுப டைத்தனை புந்தி யில்லாய்.
|
14 |
|
|
|
|
ஈண்டேகடி
தேகியி ருஞ்சுமை யின்னல் போக்கி
ஆண்டேகுடி புக்குனை யாருயி ராக வன்பு
பூண்டாதர முற்றபொ லன்கொடி யோடு வாழ்தி
மாண்டாயெனி னும்வசை யன்றிசை யன்றி மாதோ.
|
15
|
|
|
|
|
பெருமாநிதி
யும்முயர் கல்வியும் பெற்றி சேர்நற்
கருமாதியும் வண்புக ழுங்கவி னிப்பொ லிந்த
தருமாபுரி யைப்பொரு மென்றுத ராத லத்தே
ஒருமாநக ரையுரைப் பாரெவ ருண்மை தேரில்.
|
16
|
|
|
|
|
நன்றென்னின
லங்கிளர் நல்லற நண்ணி யுய்தி
அன்றென்னில்வி னைச்சுமை யோடிட ராழி நீந்திச்
சென்றந்நகர் துன்னரி தாலது தேர்தி யென்றான்
நின்றுன்னிவி சாரிதி கைத்தன னெஞ்சம் வேறாய்.
|
17 |
|
|
|
|
நல்லானிவன்
வாய்மொழி யாவையு நன்மை போலாம்
ஒல்லாவினை தாங்கியிந் நூனெறி யோடி யுய்ய
வல்லானநி யாயது ரந்தரன் மாடு சேரில்
எல்லாநல மாமென வெண்ணிமற் றீதி சைப்பான்.
|
18 |
|
|
|
|
வழுக்குற்றநி
லத்தொரு கோனனி வாய்த்த மென்ன
வழுக்குற்றநின் வாயுரை யீண்டெனக் குற்ற தைய
வழுக்குற்றம னத்துய ரச்சுமை யாற்று கிற்பான்
வழுக்குற்றவெ னக்குரை யிற்புறம் யாண்டை யென்றான்.
|
19 |
|
|
|
|
விலங்காதிவ
ழிக்கொடு சென்றவ்வி லங்க லுற்றால்
இலங்காரெழின் மாநகர் தோன்றுமங் கெய்தி வாயில்
அலங்காரநீ தியற வற்றொழும் பாகு சிந்தை
மலங்காதிந லம்பெறு வாயென வாழ்த்தி விட்டான்.
|
20 |
|
|
|
|
தற்புத்தியும்
போய்ச்சுவி சேஷன்முன் சாற்று முண்மைச்
சொற்புத்தியும் போயிலௌ கீகன்மன் றூண்டி விட்ட
துற்புத்தியி னீர்மையை வேதியன் சூழ்ச்சி யற்று
நற்புத்தியென் னாமருண் டேகின னன்மை யோரான்.
|
21
|