|
மெய்தானெனி
னுஞ்சுவி சேடன்வி ளம்பு மார்க்கத்
தெய்தாரெவ ருங்கடு மோசமோ டெண்ணி றுன்பம்
வெய்தாம்பசி தாகம்வி ரோதமி குத்த தாலே
நொய்தாகநி னைந்துது ணிந்தனை நோக்கு கில்லாய்.
|
6 |
|
|
|
|
இருளுண்டிட
ருண்டுப சாசுசெய் யின்ன லுண்டு
வெருளுண்டிக லுண்டுபல் விக்கின முண்டு துட்ட
நருளுண்டரி யேறுவி டங்கொள்பன் னாக முண்டு
மருளுண்டுதி யங்கவ ரும்பல மார்க்க முண்டே.
|
7
|
|
|
|
|
துன்பாருளை
தோய்ந்தனை யாதலிற் றோழ நீயவ்
வன்பாடணு மாத்திர மென்னம னக்கொ ளின்னும்
முன்பாகவொவ் வோர்துயர் மேருவின் மும்மை யாக
உன்பாலடை யுங்கணிப் பில்லன வுண்மை யோர்தி.
|
8 |
|
|
|
|
இன்னோரன
பாடுகள் நேர்ந்துனை யேய்ந்த போதில்
என்னோபுரி கிற்றியெ னின்னுரை யெண்ணி யெண்ணி
அன்னொவென நின்றழு தேங்குவ தன்றி நண்ப
முன்னோர்ந்துவ ருந்துயர் நீங்கமு யன்றி டின்னே.
|
9 |
|
|
|
|
அந்தோகெடு
வாயுன்ன கத்துண்மு ளைத்து வீங்குஞ்
சந்தாபவி காரம லாற்சமழ்க் கின்ற பாரம்
எந்தொபுக றீவினை தீவினை யென்று நையுஞ்
சிந்தாகுல நீங்குதி யேற்சுமை தீரு மாதோ.
|
10 |
|
|
|
|
கோட்டான்முயல்
கீண்டது மேனிகு ளித்த காயப்
பட்டாலினை வுற்றன னென்றுப ணித்தல் போலாந்
தீட்டாகிய தீவினைச் சும்மைசி தைக்க வாற்ற
மாட்டாதுழல் வேனென நீசொலு மாற்ற மன்னோ.
|
11 |
|
|
|
|
மறக்கத்தகு
மாறெவ னீங்கரும் வன்ப ரத்தை
உறக்கத்தும்வ ருத்துமென் றாலிஃ தொன்று கேணீ
துறக்கத்தைநி கர்த்தது நற்றவர் தொக்க தாண்டு
சிறக்கத்தகு மூர்தரு மாபுரி சேய தன்றால்.
|
12 |
|
|
|
|
பன்மாண்புறு
மப்பதி சென்னெறி பற்றி யேகி
இன்மாண்பன றக்கிழ வோனென வேத்த நின்ற
நன்மாண்பனுக் கிற்றிவை யாவுந விற்றி லன்னோன்
சொன்மாண்பினி னின்சுமை யொல்லைதொ லைப்ப னன்றே.
|
13 |