பக்கம் எண் :

94

  மன்ன னேவலில் வருபிர யாணிகள் வழுவி
இன்ன லெய்திடா திராஜபா தையினிரு மருங்கும்
முன்ன ராக்கிய பித்தியுண் டிவ்வகை மோசந்
துன்னு றாதுசெந் நெறிக்கடை வாயிலைத் துன்னில்.

49
   
  இன்ன வாறெனக் கிதமுற வெழின்முக மலர்ந்து
நன்னர் வாசக நவிற்றிய சஹாயற்கு நன்றி
பன்னி யஞ்சலி வரன்முறை பணிவுடன்னல்கிச்
சொன்ன வேதிய னிலையினை நாடுவான் றுணிந்தேன்.
50
   
                      அவநம்பிக்கைப் படலம் முற்றிற்று
                      __________________________________
   
 
லௌகீகப் படலம்
 
   
  ஓதக்கடல் சூழுல கத்தையு வர்த்து நின்ற
மேதக்கநீர் மைவிறல் வேதியன் வேத நுண்ணூற்
போதக்கதி கொண்டொளி வாயில்பொ ருந்த நோக்கி
நோக்கசும் மையொடு போயினன் சிந்தை நொந்தே.
1
   
  அவ்வேலையிச் சாபுர மென்னவ டுத்தி ருக்கும்
வெவ்வூரிடை நின்றுலௌ கீகன்வி ரைந்து கிட்டி
ஒவ்வாதக டுஞ்சுமை தாங்கியை யொப்ப நைவாய்
எவ்வூர்செல வெண்ணுதி நண்பவி யம்பு கென்றான்.
2
   
  மோகாதுர னாகிய றத்துறை முற்று நீத்த
ஆகாமிய னானென்ன ருஞ்சுமை யாற்று கில்லேன்
வாகாயசெ ழுஞ்சுவி சேடன்மெய் வாக்கை நம்பி
ஏகாதிப னின்னருள் பெற்றிட வேகு கின்றேன்.
3
   
  முன்னானதி ருக்கடை வாயிலை முற்றி லைய
பின்னாகவ றிந்திடு வாய்வரு பெற்றி யாவும்
என்னாவுரை தந்தெனை யேவின னென்றிவ் வெல்லாஞ்
சொன்னானது கேட்டுலௌ கீகனுஞ் சொல்ல லுற்றான்.
4
   
  பொருளுற்றறி யாதபுன் மாக்கள்பு கன்ற சொல்லான்
மருளுற்றுரி மைத்திறன் யாவும்வ ரைந்து வீசி
இருளுற்றிடர் துற்றிய பாழ்நெறி யேகி னாயென்
றருளுற்றநந் நாட்டவர் பேசவ றிந்த துண்டே.
5