பக்கம் எண் :

93

  நம்பி சொல்லுவல் கேட்டிமற் றிதன்றிற நலஞ்சேர்
தம்பி ரானொடு மாறுகொண் டிடுமொரு சழக்கன்
வெம்பி மானிடக் குழுக்களை நன்னெறி விலக்கிக்
கும்பி பாகத்திற் குடிபுகுத் துவதவன் கொள்கை.
41
   
  சேற்று நீணில மாமிது செய்ததீ வினையைத்
தோற்று விப்பது பரனருள் மறைத்திரு டொகுத்து
மாற்ற ருந்திகில விளைப்பது வன்றுயர் குழுமி
வீற்றி ருப்பது நொதிப்பது வெறுமனஸ் தாபம்.
42
   
  வஞ்ச நெஞ்சென வாழ்ந்தது மருவுமூ வாசை
விஞ்சி னாலெனப் பரநதது வெவ்வினைத் திரள்போற்
நெஞ்ச வேசெறிந் துளதுபொய் வேதியர் செயலில்
எஞ்சு றாததுந் நாற்றமிக் கதுபுற மெங்கும்.
43
   
  கானி லைத்துநின் றோலிடக் கவிழ்ந்தவஞ் சிரத்தை
மேனி மிர்த்தவொட் டாதமிழ்த் துவதிதை விறல்கொள்
ஆனி துற்றிய வழிம்பனா மலகைமுன் னகழ்ந்தான்
நானி லத்தவ நம்பிக்கை யெனப்படு நாமம்.
44
   
  செப்ப னிட்டிட முடிவதன் றாகலிற் சேற்றுக்
கெப்பு றத்தினு மிடைக்கிடை யிருஞ்சிலை நிறுவி
ஒப்ப மிட்டனர் கருணைமன் னதுபிடித் துந்தித்
தப்பி யிக்கரைப் படுகிலார்க் குய்விலை தக்கோய்.
45
   
  தேம லர்த்தொடை நரபதி யொருவன்முன் றியங்கிக்
காம மோகித னெனுமொரு கள்வனாற் கவிழ்ந்திங்
கேம மின்றியே தத்தளித் திடருழந் தினைந்தான்
மீம கீபதி நிறுவிய சிலைபற்றி மீண்டான்.
46
   
  மீண்டி ருங்கரை யேறியுயந் தவர்சிலர் மீளா
தியாண்டு நீங்கரி தாகிவெவ் விடருழந் தேங்கி
ஆண்ட நாயக னருட்டுணை பற்றிடா தவமே
மாண்டு போனவர் வாரிதி மணலினும் பலரால்.
47
     
  மண்ணி லாரண நூனெறி மயக்கற விளக்கி
விண்ணி லாரருள் ஞானசூ ரியனொளி வீசக்
கண்ணி லாரென மருண்டுளைப் படுவது கருதில்
அண்ண லார்பிழை யன்றிவ ரறிமட மாமால்.
48