|
நல்ல
நூனெறி யாமிது வாயிலை நாடிச்
செல்ல யற்புறம் விலகிடிற் றீங்குறல் திண்ணம்
புல்ல ரோடுரை யாடிவீண் பொழுதுபோக் காதி
ஒல்லை யேகென விடைகொடுத் தேவின னுவந்து. |
33 |
|
|
|
|
தீங்கு
நேர்ந்ததுஞ் செஞ்சுடர் முன்பனி சிதறி
நீங்கு மாறுசு ரேந்திர னருளிய நெறியும்
ஓங்கு மன்பொடு சஹாயன்வந் துதவிய வுரித்தும்
வீங்கு காதலோ டுன்னிவே தியனிவை விளம்பும்.
|
34
|
|
|
|
|
அரவு
கௌவிய தேரையை மீட்டென வகாதத்
துரவ ளற்றினின் றெனைக்கரை யேற்றிய தோன்றால்
கரவி லாதுனைப் பழிச்சுவ தலதுகைம் மாறொன்
றுரவு நீணிலத் துண்டுகொல் யானுனக் குதவ.
|
35 |
|
|
|
|
பன்ன
ரும்பல பாதகம் பயின்றபா மரனாம்
என்னை யுன்னவெம் மாத்திர மெம்பிரா னுளத்தில்
அன்ன தாகநின் னரியபே ருதவியெற் கமைத்த
மன்னி ரும்பெருங் கருணைக்கு முளகொலோ வரம்பு.
|
36 |
|
|
|
|
பற்றி
யாதுமின் றாகவும் பரிந்துமெய் யன்போ
டுற்று நேர்ந்தவர்க் குயிரளித் தாயினு முதவி
முற்றி யாதரம் புரிவரான் முன்னவ னருளைக்
கற்று வல்லசான் றோரெனக் கேட்டுனைக் கண்டேன்.
|
37 |
|
|
|
|
என்று
பன்முறை நன்றியை வியந்தின வியம்பித்
தன்று ணைக்கரங் குவித்துவந் தனம்பல சாற்றி
முன்று னுங்கடை வாயிலை நோக்கினன் முடுகிச்
சென்ற னன்னொரு தமியனாய் வேதியர் திலகன். |
38 |
|
|
|
|
நிகழ்ந்த
சம்பவம் யாவுங்கை நெல்லியங் கனியிற்
றிகழ்ந்த வவ்வயிற் சஹாயனை நோக்கியான் றிருமி
அகழ்ந்து வைத்தவர் யாவரிந் நொதிக்கிடங் கரசன்
இகழ்ந்த தென்னையோ செவ்விதாக் காமலிவ் வழியை.
|
39 |
|
|
|
|
பரம
ராஜ்ஜிய நாடியோர் படர்நொதி யிதனுள்
உரமி லாதுவீழ்ந் துயங்கவிட் டிருப்பதென் னுரிமை
தரமி லாதுயர் மகிபதி யருட்கிது தகுமோ
வரம னோகர தெரித்தியென் றுரைத்தனன் வணங்கி.
|
40 |