|
மறங்கு
லாவிய மனத்தின ரின்னணம் வகுத்துப்
புறங்கு ரைத்திட வூசலா டுளத்தொடும் போனான்
இறங்கு சென்னிய னாகிமென் னெஞ்சனாண் டிப்பால்
அறங்கு லாவிய வேதியற் குற்றதை யறைவாம்.
|
25 |
|
|
|
|
மயல
ளற்றில்வீழ்ந் துயல்பவன் மருவுதன் பலத்துக்
கியலு மட்டுமக் கரைப்பட முயன்றுமெய் தரிதாய்ச்
செயலொ ழிந்தியான் றிருமினுந் தேசநா சத்தில்
அயலு ளாரொடு மவிவனே யென்றறி வழுந்தான்.
|
26 |
|
|
|
|
சேற்று
நீணிலங் கடந்துநன் னெறிக்கரை சேர
ஆற்ற லின்றிநின் றாகுலித் தவசமுற் றருகே
தோற்று மிச்சுடர் வாயிலைத் துன்னியா னுய்ய
மாற்ற ருந்துணை வாய்க்குமோ வீண்டென மலைந்தான்.
|
27 |
|
|
|
|
ஆய
காலைநஞ் காருயி ரளிக்குஞ்
சேய நன்மருந் தெதிர்ந்தெனத் தேம்பிநின் றழுசேய்க்
காயெ திர்ந்தென வஞ்சலென் றாங்குவந் தடுத்தான்
நேய மிக்கச ஹாயனென் றுரைபெறு நெடியோன்.
|
28 |
|
|
|
|
கிட்டி
வந்துநின் றெம்பிநீ கெடுநொதி யிதனுட்
பட்டு யங்குவ தென்னைநம் பார்த்திவ னருளால்
இட்ட கற்களி லூன்றிநின் றிக்கரை யேறா
தட்ட திக்கையும் பார்ப்பதென் னவமதி யென்றான்.
|
29 |
|
|
|
|
ஐய
கேள்சுவி சேஷக னாருயிர்க் கரணாந்
தெய்வ வாயில்புக் குய்தியென் றுரைத்தனன் றெருண்டு
மெய்யொ ளிக்குறி பிடித்தியான் விரைந்துவந் தளற்றில்
வெய்ய தீவினை முன்னின்று வெருட்டலில் வீழ்ந்தேன்.
|
30 |
|
|
|
|
கண்ணி
ருண்டுளங் கலங்கலாற் கதித்திடுஞ் சுமையால்
அண்ணல் வாக்கினி லமைந்தவஞ் சிலைதெரி யாமல்
எண்ண மிட்டுழல் கின்றன னிவணென விசைத்தான்
நிண்ண யங்கடைப் பிடித்துநல் வழிப்பட்ட நிவர்த்தன்.
|
31 |
|
|
|
|
சொற்ற
தோர்ந்தருட் சஹாயனுந் துரிசறு முரைக்கல்
இற்றி தீதெனக் காடயாண் டூன்றிநின் றென்கை
பற்று கென்றுதன் கரங்கொடு பற்றியீர்த் துரங்கொள்
நற்ற ரைக்கணே நிறுவிமற் றவற்கிவை நவில்வான்.
|
32. |