|
இன்னு
மெத்தனை யவதியோ துன்பமோ விடுக்கண்
என்ன வோவுயிர்ச் சேதம்வந் தியையினு மியையும்
அன்ன தாதலில ஜீவனோ டகன்றியா னகத்தைத்
துன்னி யின்னலற் றிருப்பதே நலனெனத் துணிந்தேன்.
|
17 |
|
|
|
|
நித்தி
யானந்த ராஜ்ஜிய நெறிகடைப் பிடித்துப்
பத்தி யானது பழுத்துளை போலநீ பகர்ந்த
முத்தி மாநல முளைநில முழுமையுங் கடந்து
தத்தி யேறியக் கரைப்படிற் பெற்றனை தக்கோய்.
|
18
|
|
|
|
|
என்று
கூறிய வமைதியின் மறைந்துட னியைந்து
நின்ற காமமோ கிதன்பிர பஞ்சனன் னெறியைத்
தொன்று தொட்டறத் துடைத்திட முயல்கின்ற தூர்த்தன்
ஒன்றி மூவருங் குதுகலித் தோடிவந் துற்றார்.
|
19 |
|
|
|
|
உற்ற
டைந்துமென் னெஞ்சனுக் குவப்புரை பேசிப்
பற்றி யீர்த்தனர் பிடர்பிடித் துந்தினர் பழுது
துற்று சிந்தையி னானுமங் கவரொடு தொடர்ந்து
நற்றி றங்கெடு நாசதே சத்தைநண் ணினனால்.
|
20 |
|
|
|
|
கோது
துற்றிய நிலையிலாக் குச்சித வாழ்வைக்
காத லித்துநித் தியசுக வாழ்வினைக் கசந்தான்
ஏதங் கொண்டுநல் லூதியம் போகவிட் டிடுமிப்
பேதைக் கெங்ஙனம் வாய்க்குங்கொல் பேரருட் பெற்றி.
|
21 |
|
|
|
|
நிருவி
சாரத்தை யடைதலு நெறிநிலா மாக்கள்
பெருவி சாரியைப் பின்றொடர்ந் தேகிய பித்தன்
வருவி சாரத்தை யறிகுதும் யாமென வல்லே
தெருவி சாலத்தை யடைத்தனர் வயின்றொறுந் திரண்டு.
|
22 |
|
|
|
|
மீண்ட
காரியம் வினவிநன் றெனச்சிலர் வியந்தார்
மாண்ட போதினும் வசையறா தெனச்சிலர் வைதார்
ஆண்ட வஸ்தையுண் டென்றுகண் டச்சமுற் றவலித்
தீண்ட ணைந்தனன் கோழையென் றார்சில ரிகழ்ந்து.
|
23 |
|
|
|
|
முட்டிப்
பின்குனி மூடனென் றார்சிலர் முனிந்து
திட்டிப் போயினர் சிலர்சிலர் தீண்டலி ரிவனைக்
கிட்டிப் பேசினுங் கேடென்றார் சிலர்சிலர் கெழுமி
மட்டிக் காயிரஞ் சொலினுநன் மதிவரா தென்றார்.
|
24 |