|
|
|
|
வேறு |
|
|
நங்காவ
லன்றிரவ டித்துணைந யந்தோய்
மங்காவ ழற்சிகைம காபுனித வாவி
இங்காத ரித்தெமித யத்தினிதி யற்றும்
பொங்கார ருட்கிரியை போலுமிது காண்டி.
|
58 |
|
|
|
|
ஆயகிரி
யைத்திறம னைத்தையும டர்ப்பான்
மாயவல கைக்கிறைசெய் வன்றொழிலை மானும்
மீயுறவி ரைந்திடைய றாதுபுனல் வீசிக்
காயெரிய ணைக்கமுயல் காட்சியிது காண்டி.
|
59 |
|
|
|
|
கரந்தொருவ
ரெண்ணெய்சொரி காட்சிகரு துங்கால்
நிரந்தரம ருட்குரிசி னேர்ந்தலகை யுட்க
உரந்தரும காகிருபை யுள்ளுறவ ழங்கிப்
புரந்தருளு மாறிதுவெ னப்புகறல் போலும்.
|
60 |
|
|
|
|
சஞ்சலவி
தந்தருச ழக்குறுபி சாசம்
விஞ்சுபல மாயமித யத்துவிளை விக்கும்
நஞ்சனைய தீவினைந யக்கநமை யேவும்
வஞ்சனைமு யன்றுலவு மென்றுநம ருங்கில்.
|
61 |
|
|
|
|
வேதாக
மாதியைவி ரித்துணர வொட்டா
தேதாகி லும்முலக வேலையிலி ழுக்கும்
வாதாடியாடிநம னக்கரிம ழுக்குஞ்
சூதாவி டுக்குமதி துஷ்கிருத சூழல்.
|
62 |
|
|
|
|
ஈட்டுபல
தீவினையை யுள்ளுறவெ டுத்துக்
காட்டுமிறை வன்பெரிய கருணையைம றைக்கும்
வீட்டுலக மின்றெனவெ ருட்டுபுசந் தேகக்
கூட்டினில டைத்துயிர்கு டித்தினிது வக்கும்.
|
63 |
|
|
|
|
சீமான
ருட்குரிசில் ஜேசுதிரு நாமப்
பூமான மக்குதவு புண்ணியந லத்துக்
கேமாறி நித்தியவி டுக்கணுற வெத்திக்
காமாது ரக்குழிக விழ்த்துறவ மிழ்த்தும்.
|
64 |
|
|
|
|
இம்மாநி
லத்தவத ரித்தகும ரேசப்
பெம்மானை யுங்குறுகி மும்முறைபி தற்றி
அம்மாத கைந்திடமு யன்றதென லாயிற்
சும்மாவி டுங்கொனர துர்ப்பலது ரும்பை.
|
65
|