|
மல்லாடு
வன்கணய வஞ்சமுறு மாயப்
பொல்லாத பேயினைமு ருக்குபுபு றங்கண்
டெல்லாந லம்பெறவி ரக்ஷைதரு மெல்லாம்
வல்லான்ம காகிருபை யுள்ளுறம தித்தி.
|
66 |
|
|
|
|
மாதாவி
னின்றெமைவ ளர்க்குமதி யூட்டித்
தாதாவி னின்றுசம ரக்ஷணைச மைக்கும்
வேதாவு மாகியுயர் வீட்டுலக முய்க்கும்
நீதாதி பன்கிருபை நெஞ்சுறநி னைத்தி.
|
67 |
|
|
|
|
நஞ்சீவி
யத்தினிடை யெத்தனைகொ னாசம்
வெஞ்சீய மாமலகை யெத்தனைவி தத்தில்
துஞ்சீடு பாடுகடொ குத்தனது கைத்திட்
டஞ்சீரெ னாவுதவிற் றாண்டையரு ளன்றோ.
|
68 |
|
|
|
|
தன்னிருத
யத்தருட ரித்தியலு மாறும்
பின்னரது நன்றுநிலை பெற்றுவளர் சீரும்
என்னபரி சென்றொருவ னெண்ணியினி தாயில்
இன்னபரி சென்றளவி டற்கெளிய தன்றால்.
|
69 |
|
|
|
|
இத்தகைய
காட்டிசயையுன் னெண்ணிடையி ருத்திப்
பத்தபரி பாலனப ரஞ்சுடரை நாடி
முத்தியுல கத்துநெறி முன்னிடுக முற்றுஞ்
சித்தசல னத்தையொழி கென்றினிது செப்பும்.
|
70
|
|
|
|
|
நன்றுடன
டத்தியினு நல்லுணர்வு நல்குந்
துன்றுசில காட்சியுள தொக்கறிதி யென்னாச்
சென்றெழில்கு லாவுமொரு திவ்வியவி னோத
மன்றுசெறி மாளிகையின் மாடணுகி நின்றான்.
|
71 |
|
|
|
|
பானிலவி
னாற்றிகழ்ப ருப்பதமி தென்னத்
தூநிலவு வெண்சுதைகு யிற்றியொளி துன்னும்
வானிலவு மேனிலைய மாடமது கண்டான்
கோனிலவு நாடுகுடி கொள்ளுமன முள்ளான்.
|
72 |
|
|
|
|
கண்டுமன
முங்கணும்வி யப்பொடுக ளிப்புக்
கொண்டதுத னித்தனிகு றித்துவரு போழ்தில்
விண்டொடநி வந்தவதன் மேலரமி யத்தில்
வெண்டுகில்பு னைந்துலவு வித்தகரை நோக்கா.
|
73 |