பக்கம் எண் :

121

  ஆசறுகு ணத்தரொரு சிந்தையா பேதர்
மாசறுமெய் யன்புடைய ரென்றுமகிழ் பூத்துத்
தேசுறம லர்ந்தமுக மேநனிதெ ரிக்கும்
ஈசனுல கெய்தியவி ருங்குரவர் போலாம்.

74
   
  எட்டரிய மேனிலையி தெய்தவரு மாயிற்
கிட்டரிய மாபுனித வெண்டுகில்கி டைக்குஞ்
சிட்டரிவ ரோடளவ ளாவுநிலை சேரும்
விட்டொழியு மிச்சுமைவி டாயெவையு மேவா.
75
   
  கூடுமெனி னன்றெனவு ளத்திடைகு ணித்து
மாடணுகி நின்றமறை வாணன்முக நோக்கிப்
பீடுபெறு மேனிலைபி றங்கரமி யத்தை
நாடியவ ரோடுரிமை நான்பெறுவ தாங்கொல்.
76
   
  ஐயவெது சித்தமறி யேனெனவி னாவக்
கையுறவ ணைத்துவரு கென்றுகடி காவன்
மையறவி ளங்குமணி வாயிலின்ம ருங்குற்
றையமற வேநிகழ்வ கண்டறிதி யென்றான்.
77
   
                  வேறு
  கரையில் பேரின்ப மாளிகை யகம்புகக் கருதும்
புரையி் லாமனத் தவர்பெயர் புத்தகச் சுருளில்
வரையு மாறொரு துரைமகன் வாயிலின் மருங்கே
நிரையி லிட்டபொன் னாசனத் திருந்தன னிலவி.
78
   
  மாய வேதிக ளாயிர மாயிரம் வழங்கி
ஆய வில்லகம் புகாவகை யியன்றமட் டடர்க்கத்
தீய ரோர்சிலர் வெங்கதந் திருகினர் செறிந்து
பேயெ னாத்திரிந் துலவினர் வாளொடு பிறங்கி.
79
   
  சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு
நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர்
உத்த ரம்மிலா துட்புகப் பெறாமையி லுலவிப்
பத்த ரோர்சிலர் முன்றில்வாய் நின்றனர் பரிந்து.
80
   
  உற்ற மெய்த்திரு வசனமாம் பட்டய முருவிச்
செற்ற மிக்கவச் செறுநரைச் செறுத்திடார் தியங்கிக்
கொற்ற வாழ்மனை முன்றிலின் வயின்றொறுங் குறுகித்
தெற்றி நின்றுபின் னிடைந்தனர் சிலருளந் திகைத்து.
81