|
கான
வேடுவர் கையகன் றறவிடாய் கதுவித்
தூந றும்புனல் துருவியோர் வாவியிற் றுன்ன
வான கப்புலி யாங்கெதிர் மறித்திட மலங்கு
மானி னத்தையொத் தலம்வந்தார் சிலர்சிலர் மயங்கி.
|
82 |
|
|
|
|
கோம்பி
முற்படு தோகையிற் குறுகியுள் ளுடைந்து
பாம்பின் வாய்ப்படு தேரையிற் பரிவுறீமப் பதைத்துச்
சாம்பி யுட்புகுந் தருக்கில ராகிமெய் தளர்ந்து
தேம்பி நன்னிலை கலங்கினர் சிலர்செய லழிந்தே.
|
83 |
|
|
|
|
ஆய
காலையெம் மாண்டகைக் கன்பருச் சனைசெய்
தூய சிந்தைய னெறிதவ றாதுசெல் சூரன்
காய மாதிமுப் பகையறக் கடிந்தவன் ககோள
நாய கற்கித யாசன மளித்தவோர் நம்பன்.
|
84 |
|
|
|
|
ஜீவ
ரக்ஷையைச் சென்னியிற் றிருத்திமெய் யென்னும்
ஓவில் கச்சினை யரையிலிட் டிறுக்கியொண் ணீதி
மேவு மோர்கவ சத்தினை மெய்யுறப் புனைந்து
தீவி னைத்தொடர் தேய்த்திடு கழலையுஞ் சேர்த்தி.
|
85
|
|
|
|
|
பயில்த
ரும்விசு வாசமாம் பரிசையைப் பற்றிச்
செயிரி லாதிரு கூரொடு திகழ்திரு மந்த்ர
வயிர வாட்படை வலக்கையில் வாங்கிமன் னருளாற்
றைரி யத்தொடு வாயிலி னருகுறச் சார்ந்தான்.
|
86 |
|
|
|
|
பொறித்தி
ருந்தவற் கஞ்சலி வரன்முறை புரிந்து
குறித்தி யென்பெய ரையபுத் தகத்தெனக் கூறி
மறித்து நின்றவம் மள்ளரோ டெதிர்ந்தமர் மலைந்தான்
வெறித்த சிந்தையார் வீசினர் வெருட்சியாம் விசிகம்.
|
87 |
|
|
|
|
குழுமி
நாய்க்கணங் குரைப்பினுங் கோளரிக் கென்னோ
பழுது நேருமீ தறிகிலார் பலபடப் பிதற்றிக்
கழுது நல்கிய கருவிகள் கடுந்தறு கண்ணார்
முழுது மேலெறிந் தார்த்தனர் முறைமுறை முடுகி.
|
88 |
|
|
|
|
பொன்கு
லாநக ராதிப னருளிய புனித
மின்கு லாவிய படைக்கலம் வீணெனப் படுமோ
வன்கு லாமரோ வெற்றிபெற் றுய்வரிவ் வண்ணம்
என்கொ லாமென வயிர்த்தனர் முன்றில்வா யெவரும்.
|
89
|