பக்கம் எண் :

124

  தலையி லானந்த தைலமிட் டாட்டினர் தயங்கும்
உலைவி லாதபீ தாம்பர முடுத்தன ருவந்து
விலைவ ரம்பிலா வெண்ணிலை யங்கிமே லிட்டார்
தொலைவி லாநலந் துய்த்தினி திருந்தனன் றூயோன்.

98
   
  ஈது சம்பவம் யாவையும் வேதிய னெதிர்ந்து
காத லாயிரு கண்கணீர் மல்கிடக் கனிந்து
வேத நாயகன் கருணையை வியந்துளத் தேத்தி
ஓது சீர்த்தியாய் விடையுத வுட்புக வென்றான்.
99
   
  காலங் காட்டிய கதிர்களு முடுக்களுங் கவினி
ஞாலங் காட்டிய பூதபௌ திகங்களு நம்பன்
மூலங் காட்டிய வியல்விதி முறைதவ றாது
சீலங் காட்டிய சீர்மையைக் கண்டனை செய்யோய்,
100
   
  இயன்மு றைக்கமைந் தொழுகல்போ லெம்மையீ டேற்றுஞ்
செயன்மு றைக்கமைந் தொழுகலு நங்கடன் றீய
மயன்மு றைப்படு மனஞ்செலு நெறிப்படன் மதியன்
றுயன்மு றைக்கிறை சித்தமே நலனென வோர்தி.
101
   
  தமர நீருல கத்தவ தரித்தசற் குருமுன்
உமது சித்தமே சித்தமென் றுவப்புடன் பணியும்
அமர நாட்டையொத் தகனில மனைகவென் றளித்த
விமல மந்திரம் ஜெபித்துமென் வேறொன்று விழைதல்.
102
   
  பித்த ளைந்தவிப் பாத்திரம் பிரித்துநீ ரெடுக்கச்
சித்த மெலஃ தாகவென் சித்தமன் றென்னா
வித்த கத்திரு மைந்தனாத் துமத்துயர் மேவிக்
கெத்து சேமில்வாய் விண்டமை கேட்டிலை கொல்லோ.
103
   
  நல்குங் கேடென நன்மையை யொருவுவ நாசம்
பல்குந் தீமையை நன்மையாப் பற்றுவம் மதியற்
றல்கு சிந்தையே மாதலி னளவிலா ஞானம்
மல்கு தந்தையார் நமக்கறிந் தூட்டலே மரபாம்.
104
   
  சுருதி நாயகன் றிருவுளங் கூட்டுநாட் டோழ
கருதி யாங்குவீ டடைதலே கடனெனக் கழறி
வருதி நீயெனச் சென்றிருண் மலிந்தவோ ரரங்கைக்
குருதி வாகர தாஸற்குக் காட்டினன் கூறும்.
105