| |
கூர்த்து
நோக்குதி யிரும்பினா லியன்றவக் கூட்டுள்
வேர்த்து விம்மிநெட் டுயிர்த்துடல் விதிர்ப்புற வெருண்டு
பார்த்தி றங்குசென் னியனொரு பதிதனை வினவி
வார்த்தை யாடுதி யென்றனன் மறைவியாக் கியானி.
|
106 |
| |
|
|
| |
நன்று
நன்றெனக் கிறிஸ்தவ னன்னிலை தவறி
வன்று யர்க்குறி மல்கிய வறுமுக நோக்கிக்
கன்று சிந்தையாய் யாரைநீ கவலுமா றெவனீண்
டொன்ற வந்தகா ரணமியா துரைத்தியா லென்றான்.
|
107
|
| |
|
|
| |
வினவு
வாசகங் கேட்டலும் வெஞ்சிறை மறிந்த
வனவி லங்கொனத் தரிப்பிலா துழல்பவன் மறைதேர்
பனவ யானொரு கிறிஸ்தவன் பண்டெனைப் பலருங்
கனவி லும்பிழை கண்டிலர் கண்டிலேன் யானும்.
|
108 |
| |
|
|
| |
பிழையை
யோர்பிழை யென்றுண ராக்கொடும் பிழையார்
பிழையி லானெனப் பிழைபடப் புகழ்ந்திடும் பிழையைப்
பிழையென் றெள்ளிடாப் பித்தன்யாய் பிழைபடப் பிழைத்த
பிழைபொ றுப்பரோ பிழையிலா நீதியம் பெருமான்.
|
109 |
| |
|
|
| |
வீட
டைந்துய விரும்பியோய் வியன்பிர பஞ்சக்
காட டைந்தனன் சிற்றின்பப் படுகரிற் கவிழ்ந்தேன்
மாட டைந்துவந் தலகையுங் கெடுத்தது வலயக்
கூட டைந்துகெட் டேனினிக் கூறுவ தெவனோ.
|
110 |
| |
|
|
| |
பன்றி
மாசறப் பன்முறை கழுவவே படினுஞ்
சென்று சேற்றிடைப் புரள்வது போலும்வெந் தீய
வன்றொ டர்ப்படு ஞமலிதான் கான்றதை மறுத்துந்
தின்று தேக்கெறிந் துழல்வது போலுமென் சீர்மை.
|
111
|
| |
|
|
| |
ஐய
மின்றொரு நாளரு வருத்தெனை யயலே
வையந் தள்ளுமிம் மாநுவேல் வழிபிழைத் ததனாற்
றெய்வ வானமுஞ் சீத்திடும் யாதினிச் செய்வல்
வெய்ய பாதல மலதொரு புகலிலை மேலோய்.
|
112 |
| |
|
|
| |
போந்த
பாவிய ரெவரையும் புறக்கணி யாத
சாந்த மூர்த்திதண் ணருட்கடல் தயாநிதி தகைசால்
வேந்த னோர்திருக் குமரனென் றுரைப்பது மெய்ம்மை
ஆய்ந்த கேள்வியா யையமெட் டுணையிலை யதற்கே.
|
113
|