| |
இலகுசெந்
நீதிப் பெம்மா னிருஞ்சிறைப் படுத்தெஞ் ஞான்றும்
விலகருந் தளையைப் பூட்டி விடுத்தன ராத லாலே
உலகெலா மொருங்கு கூடி யுஞற்றினு மீட்டற் கொல்லா
அலகில்வெஞ் சீற்றச் செந்தீ யவிக்குமோ வளிய கீடம்.
|
122 |
| |
|
|
| |
இனிவரு
நியாயத் தீர்ப்புக் கென்செய்கே னீறின் றாகி
நனிவரு சதாநிர்ப் பந்த நாசத்தை யுள்ளி யுள்ளிப்
பனிவரு மிதயத் தேன்மற் றென்னினிப் பகர்வ லென்னாத்
துனிவரு முயிர்ப்ப னஞ்சித் துடிதுடித் தலறிச் சோர்ந்தான்.
|
123 |
| |
|
|
| |
நன்னிலை
தவறி யுற்ற நடுக்கமுந் திகிலுங் கண்டான்
பன்னிய மாற்றங் கேட்டான் வேதியன் பரிந்து நெஞ்சிற்
கன்னில வெழுத்துப் போலக் காட்சியைக் கவினத் தீட்டி
மன்னிய குரவ வெற்குன் பணியெது வழுத்து கென்றான்.
|
124 |
| |
|
|
| |
தொண்டரைத்
தெருட்டுந் தூய சுருதிநூல் வலவ னீண்டு
கண்டுகேட் டறிந்த விந்தக் காட்சியைக் கருத்துள் ளூன்றிக்
கொண்டநற் றவத்தை ஞான சீலத்தைக் கொளுத்துங் காம
மண்டெரி கனலா தைவாய் வழியினைச் செறித்தி மைந்த.
|
125 |
| |
|
|
| |
மதிநலங்
கெடுந்துர்ச் சீல மலியுந்தி வினைகண் மல்கும்
பதிபகை விஞ்சு நிந்தை பலுகும்வெம் பழியுஞ் சேருங்
கொதிநர கமுமங் காக்குங் குவலயங் கூவுங் கூற்றைக்
கதிதிருக் காப்புக் கொள்ளுங் காமப்பேய் கதுவுங் காலை.
|
126 |
| |
|
|
| |
விள்ளருங்
கேட்டுக் கெல்லாம் வித்திது வாத லாலே
கள்ளமின் றாகி யுள்ளங் கனிந்துசெய் ஜெபத்தினாலும்
உள்ளுறு விரதத் தாலு மொருங்கறச் சிதைத்தல் வேண்டுந்
தெள்ளியோய் பிறிதொன் றானுஞ் சிதைபடா தாகு மன்றே.
|
127 |
| |
|
|
| |
சிற்றின்பப்
பயன்கை நெல்லிக் கனியெனத் தெரியக் கண்டாய்
பற்றறுத் தியோகு செய்யும் பவித்திரான் மிகளே தூய
கொற்றவ னுலக போகங் கூட்டுண்டு களிக்கு நீரார்
இற்றிதை மறாது சேறி யிறைவழி யிறுதி காறும்.
|
128 |
| |
|
|
| |
அயலொரு
காட்சி யுண்டங் கதனையு மணுகி யாய்ந்து
மயலறத் தெருண்டு ஜீவ மார்க்கநீ வழிக்கொ ளென்னா
இயன்மன மயங்கி யாக்கை விதிர்ப்புற விரங்கி யேங்கித்
துயருறு மொருவ னின்ற சூழலைக் குறுகிச் சொல்லும்.
|
129
|