| |
பூவல
யத்தை யாளும் புரவலன் புதல்வன் றூய
சேவடித் தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியிந் நின்ற
பாவகா ரியைமற் றென்னாப் பணித்துமெய் பதறும் பான்மை
மேவரப் புகறி யுற்ற வேதியற் கறிய வென்றான்.
|
130 |
| |
|
|
| |
நலங்கிளர்
குரவன் கூற நடுங்கிமெய் பதறி யுள்ளங்
கலங்கிவெய் துயிர்த்துச் சென்னி கவிழ்த்தந்தக் கரணம் யாவும்
மலங்கியுள் ளழியு மந்த மதியிலான் மறைவ லாளன்
இலங்கெழின் முகத்தை நோக்கி யினையன பகர லுற்றான்.
|
131 |
| |
|
|
| |
ஆத்துமக்
கவலை கொள்ளா வறிவிலி யகோர பாவத்
தீத்தொழின் மறவன் றேவச் செயலெலா மிகழ்ந்து பேசும்
நாத்திகப் புலைய னந்தோ நாசதே சத்தை நச்சி ஆத்திக
நெறியிற் செல்லா வசடர்க்குள் ளசட னேயான்.
|
132 |
| |
|
|
| |
கருதிலென்
ஜீவ காலங் கமரிடைக் கவிழ்த்த பால்போல்
ஒருதிறத் தானு மைய பயன்படா தொழிந்த துண்மைச்
சுருதிகூ றியவா றாகத் துயிலிலோர் கனவு கண்டு
வருதிகிற் கணங்கண் முன்னின் றுருத்தெழ வருந்து கின்றேன்.
|
133 |
| |
|
|
| |
திருக்கிளர்
ஞான செல்வந் திருத்தியோய் திகாந்தங் காறுங்
கருக்கிளர் மேக சாலங் கதுமெனத் திரண்டு வானத்
துருக்கிளர் ஜோதி யெல்லாம் புதைபட வுயிர்கள் யாவும்
வெருக்கொளீஇ யலமந் தேங்க விருண்டது மேலுங் கீழும்.
|
134 |
| |
|
|
| |
இருநிலம்
புதைப்ப மல்கிப் புயல்பரந் திருண்ட தோற்றம்
ஒருமக வின்றி யூழி யுடற்றுநா ளுற்ற தென்னாப்
பெருநில மடந்தை யுள்ளம் பேதுறீஇ யிழவு காட்டுங்
கருநிறப் போர்வை போர்த்த காட்சியைக் கடுக்கு மாதோ.
|
135 |
| |
|
|
| |
நஞ்சினிற்
கரிய வாகி நளிர்நெடுங் கடலிற் பொங்கிச்
செஞ்செவே யுலகை மூடித் திசைதொறுஞ் செறிந்த கொண்மூ
எஞ்சுறாப் புனித நீதி யிறைவன்வெஞ் சினத்தீ யாவுந்
துஞ்சிட விறுத்த தென்னாத் தடித்தது துருவங் காறும்.
|
136 |
| |
|
|
| |
தடித்தொளி
தழைக்குந் தோறுந் தமரவா ரிதிநீர் சூழ்ந்த
படித்தல நடுங்கி யேங்கப் பருவரைக் குலங்கள் யாவும்
முடித்தலை தகர்ந்து சாய முடுகிமூ தண்ட கோளம்
வெடித்திட வசனிக் கூட்டம் வெய்துற விடித்த தன்றே.
|
137 |