பக்கம் எண் :

129

  நெருங்குகா ரிருந்தை யூடு நிலவுமின் னெருப்பை யுய்த்து
மருங்குவந் துலவு மூதைத் துருத்தியான் மலிய மூட்டி
இருங்கடை யூழி யென்னு மிகலுறு கருமான் வேலை
ஒருங்குடன் றழுவ லாலே யுலைக்கள மாய தும்பர்.

138
   
  மைக்கரு முகில்வாய் விண்டு வயங்கொளி மருவ மின்னி
ஒக்கநின் றுரறுங் காட்சி யும்பர்நா யகனை நீத்துப்
பக்கமே திரிந்து சோரம் பயின்றபா ழுலகைப் பல்கால்
திக்கவ மதித்துப் பேசிச் சிரிப்பது சிவணு மாதோ.
139
   
  அடுத்தடுத் துலக மஞ்ச வசனிநின் றிடிக்கு மோசை
வடுத்திகழ் மேனி வள்ளல் வருகின்றார் மழையிற் றோன்றி
நடுத்தர வென்று வானோர் நயந்துபல் லாண்டு கூறித்
தொடுத்திடை யறாது தேவ துந்துமி முழக்கல் போலும்.
140
   
  வருகும ரேசன் றூய மலரடிக கன்பு செய்த
திருவுடை யாரே யன்றி ஜெகத்துளா ரெவரு மஞ்சி
வெருவியுள் ளுடைந்து சோர்ந்தார் விதிநிடே தத்தை வீசிப்
பெருவழி துணிந்து சென்று பேதுற்றாற் பிழைப்புண் டாமோ.
141
   
                      வேறு
   
  புத்தேள் மறைதேர் புங்கவவிப் புதுமை நிகழும் போழ்தத்தே
செத்தேன் செத்தேன் யானென்னாச் சிந்தை கலங்கித்
                                      திடுக்கிட்டேன்
பித்தேறினர்போல் வாயுழறிப் பேதுற்றுயங்கிப் பிழைநினைந்து
தைக்தே னழுதேன் கதறினேன் கண்டேன் மரணக் கடுஞ்சூழல்.
142
   
  அடுக்கும் மரண நினையாத வமையத் தென்று கருதாது
கெடுக்கும் புன்மைச் சிறுமதியாற் கெட்டே னந்தோ
                                  கிளரெரிவாய்
மடுக்குங் கடிகை வந்ததினி யென்னே யென்று வானோக்கி
நடுக்குற்றுலைந்தேன் றிகிற்காட்சி நனிவிஞ் சியது
                                   கணந்தோறும்.
143
   
  மன்னுங் கருங்கொண் மூவயிறு வகிரப் பிடித்த பொன்னூலீ
தென்னத் தடித்த தொருமின்ன லிடித்த வோசை யெண்டிசையுந்
துன்னச் சுவர்க்க வாசிகளுந் துணுக்குற் றிரியத் தொலையாத
இன்னற் கடலின் கரைகாணா திருந்தே னிருந்த வெல்லைதனில்.
144
   
  பேசும் படித்தன் றுலகுநிலை பெயரப் பெருநீர் தத்தளிக்க
மாசு படிந்த மனுக்குலங்கள் வதைப்புண் டுழல வரையிடிய
மூசுந் தருக்கள் வேர்பறிந்து முறிந்து துணிய முறைபிறழ
வீசுங் கொடிய பிரளயக்கால் வீங்கிற் றண்டம் விதிர்ப்புற்ற.
145