பக்கம் எண் :

130

  வருமோ ரூழி மாருதமாம் வயவெஞ் சீயம் வந்துலவ
உருமே றஞ்சப் பிளிறொலிய வொளிர்மின் னோடைப்
 
    புகர்முகத்த  
  கருமா மேக காத்திரத்த கவின்கொள் யானைக் குழூஉக்கலங்கி
வெருவா நடுங்கித் திசைதொறுங்கூ விளிக்கொண் டோடிச்
 
    சிதறின
[வால்.
146
     
  மெய்யா யந்த வேளையிலே விசுவா சிகளும் மெய்பதறப்
பொய்யா மொழிகூ றியவண்ணம் புரைதீர் கடைசி யெக்காளம்
மையார் கலிசூழ் வையகமும் வானுந் துளங்க வலிந்துதொனி
செய்யா முழங்கிற் றினியென்னே செயலென் றழிந்தேன் சிறுமதி
 

 
[யேன். 147
இரவி தானோ கனற்பிழம்பி லியைந்த கொல்லோ வெழிலியிடை
விரவித் தடித்த மின்னொளியை விசித்துச் சமைத்த விதமேயோ
கரவொன் றறியேன் பன்மணிகள் கஞலுங் கனகா சனவுருவொன்
றுரவு செழுங்கொண் டலினாப்ப ணுற்ற தமர ருவப்பெய்த.
148
  அருளும் பொருளு நனிதெரிக்கு மான்ம போதச் சுடர்தழைப்ப
மருளுந் தெருளும் விரவியருண் மலியப் பொலியு மிதயம்போல்
வெருளு மிருளு மின்னொளியும் விரவி யிருள்போய்
 
    விடிவெய்தத்  
  தெருளும் பொருள்சேர் பொற்பீடந் திகழத் திகழ்ந்த திருவிசும்  
    [பே. 149
  ஊழிக் கதிரைப் புடைசுற்றி யூர்கோள் வளைந்த பரிசாகத்
தாழிப் புவன நடுத்தீர்க்கச் சமைந்த நியாயா சனத்தைவளைத்
தூழிக் கனல்சேய்த் துறவெழும்பி யுலவாக் கோட்டை
 
    யாயமைந்த  
தாழிப் பெருமா னாசனத்தை யடுக்க வளியேற் காவதுகொல். 150
ஆய காலை நடுப்புரிவா னமலன் வருகை யெதிர்நோக்கி
நேய மிகுவா னவர்சேனை நெருங்கி யுறைஞ்சித் தொழுதேத்தப்
போயெவ் வுலகுந் திரிந்துவரு புனிதத் தூதர் போற்றிசைப்ப
மாய மறுவே தியர்குழுமி வணங்கி வழுத்தி வாழ்த்தெடுப்ப.
151
  கின்ன ரந்தம் புருவீணை கிளருஞ் சுரமண் டலமாதி
நன்னர் நவிலு மிசைக்கருவி நாதகீத நயம்பொழியத்
துன்னு மசனி யிடித்ததெனத் தொனிக்கும் ஜெயபே
 
    ரிகைமுழங்கப்  
பன்னுஞ் சுரதுந் துமியோடு பலவாச் சியகம் பலைபம்ப. 152
தேவ தேவ திரியேக தேவ சுதன்வந் தார்கொடிய
பாவ வுலகை நடுத்தீர்க்கும் பரமன் வந்தார் பரலோக
ஜீவ பாதை திறந்துவைத்த செல்வன் வந்தார் வந்தாரென்
றாவ லொடுகட் டியங்கூறி யடியார் சங்க மார்ப்பரிக்க.
153