|
ஆதி
மூலப் பரம்பொருளி னருமைச் சுதனாங் கிறிஸ்தியேசு
மாதின் வித்தா யவதரித்த வடிவத் திருமே னியிற்றோன்றி
ஜோதி முகமண் டலச்சேவை தரிசித் தெவருந் தொழுதிறைஞ்ச
நீதி யாதி பதியாகி நியாயா சனத்து வீற்றிருந்தார்.
|
154 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
ஆண்டி
ருந்தவ ரசிளங் கோமுகம்
மூண்ட கோடைமு திர்கடு நண்பகல்
சேண்ட யங்கிய செஞ்சுடர் போன்மெனக்
காண்டல் செய்தனெ னுள்ளுறக் கன்றியே.
|
155 |
|
|
|
|
ஆதி
யம்பரம் ஜோதிப டுக்கவும்
பூதி யங்களெ ரிந்துபு கைந்தன
மீதி யங்கிய மீன்கணம் வீழ்ந்தன
மாதி ரங்கள்கு லைந்தம றுகியே.
|
156 |
|
|
|
|
பொரிவ
தீவபு கைவபு ழுங்குவ
எரிவ காந்துவ வேங்குவ தேங்குவ
இரிவ சோருவ தேகுவ னீளுவ
திரிவ நிற்பதி கைப்பச ராசரம்.
|
157 |
|
|
|
|
இருள
டைந்துவி ருசுட ரெங்கணும்
மருள டைந்துக லங்கின மாமறை
தெருள டைந்தவ ருந்திகைத் தாருளம்
உருள டைந்தில தாலிவ்வு லகமும்.
|
158 |
|
|
|
|
வைய
கத்தும டிந்தனிர் யாவரும்
நொய்தெ ழுந்துநு வல்நடுத் தீர்வையை
எய்து மின்னென்றி யாருந்து ணுக்குற
வெய்தொர் சத்தம்பி றந்தது விண்ணிடை.
|
159 |
|
|
|
|
திருக்கு
விஞ்சிய சிந்தையி னேன்செவிக்
குருக்கி வார்த்தசெம் பாயதவ் வோசைநொந்
திருக்கும் புண்ணிலெ ரிநுழைந் தாலென
முருக்கி நின்றதென் னுள்ளத்தை முற்றுமே.
|
160 |
|
|
|
|
ஆங்கெ
ழுந்தவவ் வோசையங் கங்குறத்
தாங்கி நிற்குந்த ருக்கில வாதலின்
ஓங்கு மால்வரை யுட்கியவ் வொல்லையில்
வீங்கு மெய்பிளந் தொக்கவெ டித்தவே.
|
161 |