|
தேரில்
ஜீவரைக் கொன்றுதி னந்தொறும்
வாரி வாரிம டுத்தவிம் மாநிலப்
பேரி யாக்கைப்பி ணந்தின்னி யீமவெஞ்
சேரி வாயுங்கி ழிந்துதி றந்தவால்.
|
162 |
|
|
|
|
தொன்று
தொட்டுயிர் சோர்ந்துச மாதியின்
மன்று றங்கிய மானிடர் யாவரும்
பொன்றி நீத்தபு ராதன யாக்கையோ
டின்று யிர்த்தெழுந் தாருல கெங்கணும்.
|
163 |
|
|
|
|
யாது
மின்மையி லேயுல கியாவுமோர்
ஏது வின்றியி யற்றிய வீசற்குப்
பூதி சாதனங் கொண்டுமுன் போலுரு
ஆதி யென்னவ டாதுகொ லாவது.
|
164 |
|
|
|
|
பொருப்பிற்
கானிற்பு தரிற்று ரவினில்
நெருப்பி லாற்றின்முந் நீரினி லத்தினில்
விருப்பிற் றாருயிர் வீடிய யாவரும்
உருப்பெற் றீண்டுயி ரோடெழுந் துற்றனர்.
|
165
|
|
|
|
|
வெள்ள
வாரிதி மீக்கிளர்ந் தாலெனக்
கொள்ளை மானிட மெங்குங்கு ழீஇயிரைத்
தெள்ளி டற்குமி டமிலை யென்னவே
தொள்ளைப் பூமிமு ழுதுந்து தைந்தவே.
|
166 |
|
|
|
|
கூய
போதுபி ரேதக்கு ழிவிண்ட
வாயி னின்றுவல் லேமரி மானிட
மேய புற்றிடை நின்றுவி ரைத்தெழூஉம்
ஈயல் போன்மொய்த்தி ரைத்தெழுந் தாரரோ.
|
167 |
|
|
|
|
மண்ணி
னின்றங்கு யிர்த்தம னுக்கணம்
எண்ணில் கோடிய ரென்பதை யல்லது
விண்ணி லாவுவி புதர்க ணிப்பினும்
ஒண்ணு மோவத னுண்மைதெ ரிக்கவே.
|
168 |
|
|
|
|
தூக்க
நீங்கிய வாமெனங்த தூளிநின்
றாக்கை பெற்றுயிர் பெற்றவ ரந்தரம்
நோக்கி வானவர் போற்றிய நோன்கழற்
கோக்கு மாரனைக் கண்டனர் கோதற.
|
169
|