பக்கம் எண் :

133

  கண்ட போதிரு கைத்தலஞ் சென்னியிற்
கொண்டி றைஞ்சிப்ப ரவசக் கூத்தராய்
மண்டு பேரன்பு மல்கிவ ழிந்தெனப்
பண்ட ருந்துதி பாடின ரோர்சிலர்.

170
   
  பேயுங் கண்டறி யாப்பெரு வஞ்சக
மாயங் கண்டம னத்தெமை வாழ்வித்த
நேயங் கண்டநி ரஞ்சன மேனியைங்
காயங் கண்டுக ரைந்திடு வார்சிலர்.
171
   
  தொத்தி ருக்குந றுமலர்ச் சோலைவாய்
மெய்த்தி ருக்குரு தித்துளி வேர்த்ததும்
முத்தி ரைக்குரு சேறிய மூர்த்தமும்
இத்தி ருப்படி வங்கொலென் பார்சிலர்.
172
   
  பால சூரியன் போலொளி பம்பிய
சீல மார்ந்ததி ருமுகச் சேவையே
சாலு நித்திய சாமிபர்க் கானந்தம்
போலு மென்றுளம் பூரிப்ப ரோர்சிலர்.
173
   
  கண்ணி லாரிற்க விழ்ந்துக டுஞ்சிறை
நண்ணி நின்றந மையுந்தி ருவுளத்
தெண்ணி மீட்டிங்கி னிதினீ டேற்றிய
புண்ணி யத்தைப்பு கழ்ந்துரைப் பார்சிலர்.
174
   
  தொழுவ ரோர்சிலர் தோத்திரம் பாடிநின்
றழுவ ரோர்சில ரண்ணல்ப தாம்புஜத்
துழுவ லன்பருச் சித்துயி ரார்ப்பணக்
கிழமை பூண்டகி றிஸ்தவ ராயினார்.
175
   
  ஏனை யோர்நிலை யென்னென்று விள்ளுவல்
வானி லாமழை முன்றில்வ யங்கிய
ஞான பாநுவின் சந்நிதி நாடிய
ஈன கீடமெ னத்துடித் தேங்கினார்.
176
   
  தெய்வ மின்றுசி ருட்டியு மின்றெலாம்
ஐவ கைப்பெரும் பூகத்தி லாய்த்தெனப்
பொய்வம் போதிய புல்லிய ரும்மினிச்
செய்வ தென்னென்று லைந்துதி யங்கினார்.
177