பக்கம் எண் :

134

  மாறி மாறிப்பி றவிவ ருமெனக்
கூறிக் கூறி மருட்டிய கொள்கையோர்
ஈறில் துன்பத்துக் கெங்ககல் வேமெனாப்
பாறிப் பாறிநின் றுள்ளம்ப தைத்தனர்.

178
   
  அஞ்சி டாமல கம்ப்ரம மென்றுரைத்
தெஞ்சி டாதுமண் ணானவ ரீசனைச்
செஞ்செ வேகண்டு தீவிட நாகத்தின்
நஞ்சுண் டாரிற்றி யங்கிந டுங்கினார்.
179
   
  உலகிற் பல்வகைப் பொய்மதத் துற்றுழன்
றலகி றீவினை யாத்தவ மார்க்கர்கள்
இலகு நீதியெ திர்ந்தமை கண்டெங்கும்
விலகு மார்க்கமின் றாகிவெ ருண்டனர்.
180
   
  குன்ற மேமலை யேகுகை யேபுதர்
துன்று சூழல்க ளேயெமைத் தோன்றுறா
தின்று காக்கவொல் லாதுகொ லோவெனா
நின்று கூவிநெ டிதுயிர்த் தாரரோ.
181
   
                     வேறு
   
  ஆய காலையரு டுற்றுகிரு பாச னமொரீஇத்
தூய நீதியழல் காலுமணி துற்ற ரியணை
மீயெ ழுந்தருளி வீற்றினிதி ருந்த விமலன்
சேய விழ்த்தனரோர் செம்முறைஜெ கங்கு லையவே.
182
   
  புத்த கச்சுருள்வி ரித்துலகு பூத்த வெவரும்
இத்த லத்தருகெ மக்கெதிரி லெய்து கவெனா
எத்த லத்தவர்செ வித்தொளையி லும்மெ ளிதுற
வித்த கத்திருவி தழ்ப்பவளம் விண்ட னரரோ.
183
   
  வார்த்தை யங்கதுதி கழ்ந்திடவ யங்கு புனித
மூர்த்தி சந்நிதியி னின்றுடன்மு ளைத்து முடுகித்
தீர்த்த னுக்குநர ருக்குமிடை தீத்தி ரள்செறுத்
தார்த்து நின்றதுல கத்தவர கங்க ருகவே.
184
   
  கோர வெங்கனல்த ழைத்தெதிர்கொ ளுத்தவதனால்
பார கங்குழுமு மன்பதைப தைத்து ளம்வெரீஇத்
தூர நின்றுபரி வுற்றுயிர்து டித்த னரினிச்
சார வோர்புகலு மின்றெனம னந்த ளரவே.
185