பக்கம் எண் :

135

அக்க ணத்திகில லோகசர ணாலை யர்தம்
பக்க நின்றவரை நோக்கிமுதிர் கோது மைபயன்
மிக்க நன்மணிதி ரட்டிநம மேனி லையசேர்
தொக்கு வைம்மினஃ தேதையுநீர் சோர விடலீர்.
186
வறிய புன்பதரை வன்களையை வைத்தி ரள்களைச்
செறிய வாரியடை யக்கொதிகொள் செந்த ழலிடை
எறியு மின்னனெவி சைத்தனரி சைத்த பொழுதே
பொறியெ ழுந்தனக ரிந்தனபொ ரிந்த புவனம்.
187
வனச ரோருகம லர்ப்பதமி றைஞ்சி மகிழ்பூத்
தனக னேவுபணி யைச்சிரம ணிந்து ழையராம்
பனவ ரோர்சிலரி ழிந்தவது பார்த்த னனுளம்
சினவி வந்தவர்பு ரிந்தமையெ துந்தெ ரிகிலேன்.
188
பழுத றுங்குணமெய் யன்பினொடு பத்தி கனியத்
தொழுது நின்றவரெ லாரையும்வி சும்பு சுலவிக்
குழுமி நின்றுரறு கொண்டல்கொடு போய திவண்மற்
றழுது நின்றவனை வோரும்விடு பட்ட னரவம்.
189
பூத லத்துவிடு பட்டயர்பொ லாத குழுவைக்
காத லித்துடன்வி ழுங்குவலெ னக்க டுகிவாய்
மேதி னித்திடர்பி ளந்தவிட ரூடு விரவிப்
பாத லத்தெரித வழ்ந்துபுகை பம்பி யதரோ.
190
இன்ன வாறுவிடு பட்டவரி லேயொ ருவன்யான்
மன்னி ரும்புவிபி ளந்ததும ருங்கெ னடியின்
இன்னல் கூர்நரக பாதலமு மெட்டி யதெனக்
குன்ன ருந்திகில்பி டித்ததுட னுண்மை யுரவோய்.
191
  மீக்கி ளர்ந்தமழை முன்றிலின்வி ளங்கி பிரான்
நோக்கி னாரிடைய றாதெனையந் நோக்க
 
    யில்கொள்வேல்  
தாக்கி னாலெனவி னைந்துயிர்த ளர்ந்து தமியேன்
ஆக்கை யுங்குலைகு லைந்தறிவ ழிந்த னனரோ.
192
என்னி ரும்பெரிய தீவினைகள் யாவு மிருள்போல்
முன்ன ணைந்துளம்வெ ருட்டுவன முற்று முரணிப்
பின்னி டைந்தவென கக்கரிபி றங்கி யெரிபோல்
துன்னி நின்றுசுடு வாதைபுக லுந்து ணையதோ.
193